👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள, 500க்கும் மேற்பட்ட இடங்களின் நிலை குறித்து, இன்று அறிவிப்பு வெளியாகலாம்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு, 1,538 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில், 1,100 இடங்கள் நிரம்பின. இதில், காலியாக உள்ள இடங்கள் மற்றும் கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்று, சேராத இடங்கள் என, 500க்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது காலியாக உள்ளன.
முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், அந்தந்த கல்லுாரிகளில் சேர, நேற்றுடன் கடைசி நாள். ஆனால், இடங்களை பெற்ற மாணவர்கள் சிலர், கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை. இதனால், சித்தா மருத்துவ படிப்புகளில் காலி இடங்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இது குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர் சேர்க்கைக்கான தேதி, இன்றுடன் முடிகிறது. ஆனால், மத்திய ஆயுஷ் அமைச்சகம், எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை.
நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை குறைத்தால் மட்டுமே, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும். இல்லையேல், இடமாறுதல் கவுன்சிலிங் மட்டுமே நடத்த முடியும். இது தொடர்பாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம், இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.