பணி ஓய்வு நாளில் மனைவிக்கு ஹெலிகாப்டர் பயணம் : ஆசிரியரின் அசத்தல் பரிசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 01, 2019

பணி ஓய்வு நாளில் மனைவிக்கு ஹெலிகாப்டர் பயணம் : ஆசிரியரின் அசத்தல் பரிசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஹெலிகாப்டரில் பறக்க வேண்டும்’ என்ற மனைவியின் ஆசையை தனது பணி ஓய்வு நாளன்று ஆசிரியர் ஒருவர் நிறைவேற்றினார். ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் உள்ள சவுராய் பகுதி பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் ரமேஷ் சந்த் மீனா. இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் மனைவி சோமோதி உடன் இருந்தபோது, ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது. இதைப் பார்த்த சோமோதி, ‘ஹெலிகாப்டரில் பறக்க எவ்வளவு செலவாகும்? ஒருநாள் அதில் என்னை அழைத்துக் கொண்டு போவீர்களா?’ என்று கணவரிடம் கேட்டார். பின்னர், இது பற்றி சோமோதி மறந்து விட்டார். இதை மனதில் வைத்திருந்த ரமேஷ், தனது பணி ஓய்வு நாளான நேற்று, அவர் வேலை பார்த்த பள்ளியில் இருந்து அவர்களின் வீடு இருந்த மாலவலி கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பாரம்பரிய உடையில் கூலிங் கிளாஸ் அணிந்து மனைவி, பேரனுடன் அவர் பறந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த 22 கிமீ. தூரப் பயணத்துக்காக 3.70 லட்சம் செலவு செய்துள்ளேன். இதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரை வரவழைத்தேன். எனது மனைவியின் விருப்பத்தை பணி ஓய்வு நாளில் நிறைவேற்ற இருப்பதாக தெரிவித்த உடன், மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளித்தது. எங்களின் இந்த 18 நிமிட, முதல் ஹெலிகாப்டர் பயணத்தை முழுவதுமாக ரசித்தோம். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது,’’ என்றார். ரமேஷ் சந்தின் ஒரு மகன் ஆசிரியராகவும், மற்றொரு மகன் இந்திய உணவு கழகத்தில் இன்ஸ்பெக்டராகவும் பணி புரிந்து வருகின்றனர். இன்றைய உலகில், வித்தியாசமான செயல்களை மேற்கொண்டு பிரபலம் அடையும் நபர்கள் பலர். அவர்கள் செய்யும் வித்தியாசமான விஷயத்தின் காரணமாகவே, விவாதத்தின் தலைப்பாக மாறுகிறார்கள். அந்த வகையில் தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் விசித்திரமான நிகழ்வு ஒன்றினை மேற்கொண்டு, அம்மாநில மக்களின் விவாத தலைப்பாக மாறியுள்ளார். அப்படி என்ன செய்தார் அவர்?... என்னவென்று சொன்னால் நீங்கள் நம்புவது கடினம். ஆனால் அது தான் உண்மை. ராஜஸ்தானை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது ஓய்வு நாள் அன்று, பள்ளியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கார்க் பகுதிக்கு உட்பட்ட மலாவ்லி கிராமத்தில் வசிக்கும் மூத்த ஆசிரியர் ரமேஷ் சந்திர மீனா. ஆகஸ்ட் 31 அன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தனது கடைசி நாளை நினைவில் நிறுத்த, பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்ல ஹெலிகாப்டர் முன்பதிவு செய்தார். ராஜஸ்தானில் ஒரு ஆசிரியர் ஓய்வு பெற்ற பிறகு ஹெலிகாப்டர் மூலம் தனது வீட்டிற்குள் நுழைவது இதுவே முதல் முறை ஆகும். பள்ளியிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ள தனது கிராமத்திற்குச் செல்ல அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் ரமேஷ் மீனா ஒரு ஹெலிகாப்டர் பதிவு செய்த விஷயம் அப்பள்ளி மட்டும் அல்லாமல் அப்பகுதி மக்களின் கவனத்தையே ஈர்த்தது. ஹெலிகாப்டரில் இருந்து வீட்டிற்குச் செல்வதற்கான செலவு அவர் செலுத்திய சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த விவகாரம் தற்போது அப்பகுதி மக்களிடையே பெரும் விவாதப்பொருளாக உருமாறியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews