👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐஆர்சிடிசி வலைதளம் மூலம் ஆன்லைன் ரயில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் மீண்டும் சேவைக் கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஐஆர்சிடிசி மூலமாக பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டணம் விதிக்கும் நடைமுறை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது.
அதன்படி ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கான முன்பதிவிற்கான சேவைக் கட்டணம் ரூ.15 வசூலிக்கப்படவுள்ளது. ஏ.சி. வகுப்பு முன்பதிவுகளுக்கு சேவைக் கட்டணம் ரூ.30-ஆக இருக்கும்.
இதைத் தவிர, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தனியாக விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்யப்படும் ஏ.சி. அல்லாத டிக்கெட்டுகளுக்கு ரூ.20-ம், ஏசி வகுப்புகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு ரூ.40-ம் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
நரேந்திர மோடி அரசு டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை ஊக்குவிக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவைக் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்த நிலையில், முன்பை விட குறைவான சேவைக் கட்டணத்தை மத்திய அரசு மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இனி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் செலவு பிடிக்கும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U