👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட உள்ள தமிழ் ஆராய்ச்சி குறித்த இரண்டு நாள் சிறப்புப் பயிலரங்கில் பங்கேற்க ஆய்வாளர்கள், ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழியலில் ஆய்வு மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு, அதில் உருவாகிவரும் புதிய ஆய்வுக்களங்கள் குறித்த சரியான வழிகாட்டுதலை அளித்திடும் வகையில், தமிழாய்வு நெறிமுறைகளும், புதிய ஆய்வுக் களங்களும் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் செப்டம்பர் 26, 27-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
தொல்காப்பியம் முதல் தற்கால நவீன இலக்கியங்கள் வரை இதில் விவாதிக்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள்
www.tnou.ac.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்டம்பர் 20 கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை 94446 03124, 98946 21706, 044 - 24306626 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U