Search This Blog
Tuesday, September 24, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்பட மற்றும் மின்னணு ஊடக அறிவியல் துறை தலைவருக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வு உத்தரவுக்கு, பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த கர்ண மகாராஜன் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்பட மற்றும் மின்னணு ஊடக அறிவியல் துறை தலைவராகப் பணியாற்றி வருகிறேன். எனது வழிகாட்டுதலின் கீழ் இருந்த ஆராய்ச்சி மாணவி ஒருவரின் கையெழுத்து பல்கலைக்கழக வகுப்புக்கு வராமலேயே வருகைப் பதிவேட்டில் இருந்தது. இதற்காக அந்த மாணவியை கண்டித்ததால், அவர் உள்நோக்கத்துடன் என் மீது பாலியல் புகார் அளித்தார். இதற்காக பல்கலை. நிர்வாகம் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அந்த விசாரணைக் குழுவினர் சாதி ரீதியாக என் மீது பாகுபாடு காட்டினர். மேலும், விசாரணையை முறையாக நடத்தாமல் எனக்கு தண்டனை வழங்க பரிந்துரைத்தனர்.
அதனடிப்படையில், இவ்விவகாரம் குறித்து விளக்கமளிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு கூடுதல் அவகாசம் கோரினேன், ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில், எனக்கு கட்டாய ஓய்வு வழங்கி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். எனவே, எனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய ஓய்வு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழகம் மனுதாரருக்கு கட்டாய ஓய்வு வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு நீதிபதி வி.எம். வேலுமணி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பல்கலைக்கழகம் மனுதாரருக்கு வழங்கிய கட்டாய ஓய்வு உத்தரவுக்கு, பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து வழக்கை ஒத்திவைத்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CourtOrder
Universities
காமராஜர் பல்கலை. துறைத் தலைவருக்கு வழங்கிய கட்டாய ஓய்வு உத்தரவுக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு
காமராஜர் பல்கலை. துறைத் தலைவருக்கு வழங்கிய கட்டாய ஓய்வு உத்தரவுக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.