TNPSC - குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 15, 2019

TNPSC - குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் வெளியீடான, 'டி.என்.பி.எஸ்.சி. , குரூப் 4 வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி' புத்தக வெளியீட்டு விழா மதுரையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அரங்கில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவரும்(பொறுப்பு), பொதுப்பணித்துறை மூத்த கண்காணிப்பாளருமான ஆ.செல்வம் புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: அரசின் 148 துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 6413 பணியிடங்களுக்கான தேர்விற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். அந்தளவுக்கு இன்று போட்டி கடுமையாக உள்ளது. எதிர்பார்ப்புடன் கடினமாக உழைத்து அரசு பணியை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசு நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அதிகரித்து வரும் நிலையில் பணி நியமனங்கள் குறைவாகவுள்ளது. பிரேசில் நாட்டில் ஆயிரம் பேருக்கு 111, சீனாவில் 1000 பேருக்கு 58 அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 16 அரசு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை, நலத்திட்ட அதிகரிப்பு போன்றவை லஞ்ச லாவண்யத்தை உருவாக்குவதாக உள்ளன. படிப்புடன் திறன்களையும், பொது அறிவையும் மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை, எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் சாதிக்க வேண்டும், என்றார். அரசுப்பணி அறப்பணி புத்தகத்தை பெற்று கொண்ட சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர் சங்கத் துணைத் தலைவரும், தாசில்தாருமான ஆ.தமிழரசன் பேசியதாவது: மாணவர்கள் கடினமாக உழைத்து போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். முயற்சி சிறுகதை அல்ல. அது தொடர் கதை. மாணவர்கள் மனம் தளராமல் நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து தேர்வுகளை எதிர்கொண்டால் வெற்றி பெறலாம். அரசு பணியில் சேர்ந்து ஓய்வு பெறும் வரை அதே புத்துணர்வுடன் செயல்பட வேண்டும். எந்த காலகட்டத்திலும் நேர்மையை விட்டு விட கூடாது. அரசுப்பணியை அறப்பணியாக பார்க்க வேண்டும். பணியில் நேர்மையாக இருக்கும் போது சில அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். எதையும் எதிர்கொண்டு சாதிக்க வேண்டும். இந்த புத்தகத்தில் போட்டித்தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிகள் உள்ளன, என்றார். புத்தக தொகுப்பாசிரியரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனருமான வெங்கடாசலம் பேசியதாவது: குரூப் 4, வி.ஏ.ஓ., போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இந்த புத்தகம் வழிகாட்டியாக இருக்கும். தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள், விடை விவரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன, என்றார்.அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலர் நீதிராஜ் பங்கேற்றார். புத்தகத்தை வாங்க 1800 425 7700 என்ற டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews