சுய விளம்பரம் - மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 15, 2019

சுய விளம்பரம் - மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இணையதளங்களில் சுய விளம்பரம் செய்த, ஐந்து டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, ஒழுங்காற்று குழு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபாரைச் சேர்ந்த, 1.40 லட்சம் டாக்டர்கள், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர்.இதில், 90 ஆயிரம் டாக்டர்கள் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும், 7,600க்கும் மேற்பட்டோர், புதிதாக பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், 'ஏஜன்சி'களிடம் பணம் கொடுத்து, இணையதளங்களில், 'நான் தான் சிறந்த டாக்டர்' என்பதுபோல், சிலர் சுய விளம்பரம்செய்கின்றனர். பொதுமக்களை குழப்பும் வகையில், சுயவிளம்பரம் செய்வது, இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி குற்றம். எனவே, 'இணையதளங்களில், சுய விளம்பரம் செய்யக் கூடாது' என, அனைத்து மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன்கள் மற்றும் டாக்டர்கள் சங்கங்களுக்கு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட, 50 டாக்டர்களுக்கு, பதில் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தது. முதற்கட்ட விசாரணையில், ஐந்து டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, ஒழுங்காற்று குழு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர், டாக்டர் செந்தில் கூறியதாவது: இணையதளங்களில், சுய விளம்பரம் செய்த, ஐந்து டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுப்பது குறித்து, 27ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மேலும், சில டாக்டர்கள் மீதுள்ள புகார்கள் குறித்தும், விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு, அவர்கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews