முதல் மாதத்தில், கடவுச்சொல் சோதனை: செயலி 316,000 க்கும் மேற்பட்டவற்றை பாதுகாப்பற்றது என குறிப்பிட்டுள்ளது. இது அந்த நீட்டிப்பு மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட மொத்த உள்நுழைவுகளில் 1.5 சதவீதம் ஆகும். இது மில்லியன்கணக்கான மக்களின் தகவல்கள் ஆபத்தில் உள்ளன என்பதை பரிந்துரைப்பதுடன், கூகுள் குரோமின் ஐந்து பில்லியன் நிறுவல்கள் அனைத்திலும் இந்த போக்கு ஒரு பழமைவாதமானது என்ற தோற்றமளித்தாலும் கூற்று உண்மையாகவே உள்ளது.
ஹைஜேக்கர்களின் முயற்சி: மூன்றாம் தரப்பு மீறல் மூலம் வெளியான ஒவ்வொரு கடவுச்சொற்களையும் பயன்படுத்தி இணையத்தில் உள்ள தளங்களில் உள்நுழைய ஹைஜேக்கர்கள் தொடர்ந்து முயன்று வருவதாக கூகுள் கூறுகிறது. மிகவும் முக்கியமான நிதி, அரசு மற்றும் மின்னஞ்சல் கணக்குகளில் சில பாதுகாப்பற்ற உள்நுழைவு விவரங்கள் ஆன்லைனில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கூகுள் கண்டறிந்துள்ளது.
ஆபத்தில் உள்ள கிரிடிட் கார்டு விவரங்கள்: பயனர்கள் தங்களது கிரிடிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்கும் ஷாப்பிங் இணையதளங்கள், செய்தி மற்றும் பொழுதுபோக்கு தளங்களில் இந்த ஆபத்து மேலும் அதிகமாக உள்ளது. மிகவும் பிரபலமான வலைத்தளங்களை தவிர, பயனர்கள் பாதிக்கப்படக்கூடிய கடவுச்சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் 2.5 மடங்கு அதிகமாக அவர்களின் கணக்கை ஹைஜேக் ஆபத்தில் விடுகின்றனர்.
இதை எப்படி தவிர்க்கலாம்?: உங்களது எல்லா கணக்குகளுக்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை குறைக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
புதிய கடவுச்சொல் அடையாளம்: கடவுச்சொல் பரிசோதனை நீட்டிப்பின் மூலம் பாதுகாப்பற்ற கடவுச்சொற்கள் என குறிப்பிடப்பட்டவைகளில், 26 சதவீத கடவுசொற்கள் பயனர்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என கூகுள் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இன்னும் சிறப்பாக புதிய கடவுச்சொற்களில் 60 சதவீதம் எந்தவொரு தாக்குதல்களையும் தாங்கும் வகையில் எதிராக பாதுகாப்பாக உள்ளன கூகுள் கூறுகிறது. அதாவது இந்த புதிய கடவுச்சொல்லை அடையாளம் காண்பதற்கு முன் ஹேக்கர்கள் நூறு மில்லியன் யூகங்கள் செய்யவேண்டும்.
