ஆசிரியர் பணி வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 21, 2019

ஆசிரியர் பணி வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பள்ளிக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இதுவரை 12 தேர்வுகளை நடத்தி முடித்துள்ள நிலையில் அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதன்படி 13வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடக்க உள்ளது.
இந்த தேர்வு வழக்கம்போல 20 மொழிகளில் 110 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகிறது. இதன்படி செப்டம்பர் 18ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்டணங்களை செப்டம்பர் 23ம் தேதி செலுத்த வேண்டும். போட்டித் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடக்கிறது. அதனால் இன்று முதல் சிபிஎஸ்இ இணைய தளத்தில் மேற்கண்ட தேர்வுக்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதில் கூறப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தேர்வில் இடம் பெறும் தாள் ஒன்று மட்டும் எழுத விரும்பும் பொதுப்பிரிவினர் 700 கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு தாள்களும் எழுத விரும்பினால் ₹1200 செலுத்த வேண்டும். அதேபோல எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத விரும்பினால் ₹350ம், இரண்டு தாள்களும் எழுத விரும்பினால் ₹600ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
கல்வித்தகுதி: 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், சீனியர் செகன்டரி (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எஜுகேசன் (அல்லது) 4-வருட பேச்சுலர் ஆப் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.6ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், பட்டப்படிப்புடன் கூடிய 2-வருட டிப்ளமோ இன் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய 1-வருட பேச்சுலர் இன் எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் கடைசி வருடம் பயின்றுக் கொண்டிருப்பவர்களும் இந்தத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், https://ctet.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்தேர்வு முறை: அனைத்து வினாக்களும் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது. இரண்டு பேப்பர்களுக்கு சிடெட் தேர்வு நடைபெறும். அதில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மட்டும் எழுதினால் போதுமானது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-2 மட்டும் எழுதினால் போதுமானது. இரண்டிலும் பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டையும் எழுத வேண்டும். பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டிலுமே 150 கேள்விகள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். 20 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews