பேராசிரியர்களுடன் கல்விச் சுற்றுலா: சென்னைப் பல்கலை சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 31, 2019

பேராசிரியர்களுடன் கல்விச் சுற்றுலா: சென்னைப் பல்கலை சுற்றறிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவ, மாணவியரை பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் தங்களது வீடுகளுக்கு அழைக்கக்கூடாது - சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை மாணவ, மாணவியரை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தங்களது வீடுகளுக்கு அழைக்கக்கூடாது என சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கல்வி தொடர்பாக மாணவிகளை வீட்டிற்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ பேராசிரியர்கள் அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் அறிக்கை அனுப்பியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர்களின் வீடுகளுக்கு மாணவியர் செல்ல கூடாது என்றும் பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது . பல்கலை பேராசிரியர்களுடன் கல்விச் சுற்றுலா செல்லவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு எந்த விவத்திலும் இடம் தரக்கூடாது என்று பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீனிவாசன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேராசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் துணைவேந்தரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று பதிவாளர் கூறியுள்ளார். ஆசிரியர்களின் வீடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டால், பல்கலைக்கழகத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தை மாற்றும் முயற்சி இது என சென்னை பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews