👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மகாகவி பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரிசெய்யப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுதந்திரத்திற்காக இந்தியா போராடிய காலத்தில் தன்னுடைய பாடல்கள் மூலம் மக்களுக்கு ஊக்கமும் புத்துணர்ச்சியும் அளித்தவர் மகாகவி பாரதியார். மொழிக்கும் நாட்டுக்கும் அவர் செய்த தொண்டுகள் ஏராளம். இன்றும் பாரதியாரின் பாடல்களை சுட்டிக்காட்டி அரசுகளும், அதிகாரிகளும் பேசி வருவதே அவரின் எழுத்துகளின் வீரியத்துக்கான சான்று.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த பாரதியார், தன்னுடைய 39 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது நினைவு நாளில் இன்னும் பலருக்கு குழப்பம் நீடித்து வரும் நிலையில் பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடுகள் சரிசெய்யப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவு ஒன்றரை மணிக்கே அவரின் உயிர் பிரிந்தது. நள்ளிரவு 12 மணியைத் தாண்டிவிட்டதால் அவரது நினைவு தினம் செப்டம்பர்12 என்ற சரியான தேதியையே அவரது உறவினர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் அப்போதைய மரபுபடி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும் செப்டம்பர் 11 என்று குறிப்பிடப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது.
இந்நிலையில் தமிழக அரசிதழிலும், அதிகாரபூர்வ அறிவிப்பிலும் பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 12 என இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் பல கல்வி நிறுவனங்களும், பொது அமைப்புகளும் செம்டம்பர் 11ம் தேதியை பாரதியின் நினைவு நாளாக அனுசரிக்கின்றன. இது வரலாற்றுப்பிழையாக இருப்பதால் பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரிசெய்யப்பட வேண்டுமென ஆய்வாளர்களும், தமிழ் மொழி ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U