👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups

காது கேளாத பள்ளி மாணவர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
விஜயகாந்த் தனது 68-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) கொண்டாட உள்ளார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜயகாந்த் பங்கேற்று எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிய உணவு நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை விஜயகாந்த் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் தேமுதிகவின் அமைப்புரீதியான 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு மக்கள் பயன்பாட்டுக்குச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் வகையில் 1,500 ஆர்.ஓ. இயந்திரங்களை சுமார் ரூ.1.50 கோடி மதிப்பில் வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது:
சினிமா காலம் முதல் தற்போது வரை ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக விஜயகாந்த் நல உதவிகள் செய்து வருகிறார். அமேசான் காடு எரிவது வேதனையான செய்தி. மரம் நடுவது அவசியம். தேமுதிக தொண்டர்கள் அதை செய்வர். தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை தேமுதிகவினர் தூர்வாருவர். தேமுதிகவின் முப்பெரும் விழா திருப்பூரில் செப்டம்பர் 15-ஆம் நடைபெறும். அதில், விஜயகாந்த் பங்கேற்பார். எதை இலக்காகக் கொண்டு தேமுதிக தொடங்கப்பட்டதோ, அதை அடைந்தே தீருவோம் என்றார்.
துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்தசாரதி உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U