ஆதிதிராவிட நலத்துறை சுற்றறிக்கை பற்றி தெரியாது: அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 16, 2019

ஆதிதிராவிட நலத்துறை சுற்றறிக்கை பற்றி தெரியாது: அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சாதியைக் குறிக்கும் வண்ணக்கயிறுகளை அணியும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்ட சுற்றறிக்கை குறித்து தனது கவனத்திற்கு வரவில்லை என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பள்ளிகளை அடையாளம் கண்டு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு தினங்களுக்கு முன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததாக செய்தி வெளியானது. அதில், சாதியப் பாகுபாடுகளைக் காட்டும் மாணவர்களைக் கண்டறிந்து அதைத் தடுக்கவும், அவ்வாறு செயல்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அறிவுறுத்தப்பட்டிருந்தது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவை மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்றிருந்தனர். ஆனால், தேசிய பாஜக செயலாளர் ஹெச்.ராஜா, "திலகமிடுவதும், கைகளில் கயிறு கட்டுவதும் இந்துமத நம்பிக்கை தான், ஆகையால் இதுதொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்," என வலியுறுத்தினார். இந்நிலையில், இந்த உத்தரவு குறித்து தங்கள் கவனத்திற்கு வரவில்லை என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், " பள்ளிகளில் சாதி அடிப்படையிலோ, மதங்கள் அடிப்படையிலோ, மாணவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்துகின்ற வகையில் செயல்பட்டால், அதனை சரிபார்க்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பியது. அதனை, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை அரசின் கவனத்திற்கு வரவில்லை.ஆகவே, தமிழக பள்ளிகளில் முன்பு என்ன நடைமுறைகள் இருந்ததோ அந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. அந்த அரசாணை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியே பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை", என தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கலவித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரண சாரணிய இயக்க தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேல் சாரண சரணிய இயக்கத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அமைச்சர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அடுத்த ஆண்டு முதல் சாரண சாரணிய இயக்க மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்படும் என்றார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.மேலும் இலவச நீட் பயிற்சி மையத்தில் சேர 20,000 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
மேலும் சாதியை குறிக்கும் வண்ணக்கயிறு கட்டிவர தடை என சுற்றறிக்கை வெளியானது கவனத்திற்கு வரவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியான சுற்றறிக்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். சுற்றறிக்கையை திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்ற நிலையில், அரசின் கவனத்திற்கு வராமல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து ஜாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்கள் சாதியை குறிக்கும் வண்ணக் கயிறு கட்டக் கூடாது என்று ஆகஸ்ட் 12ல் பள்ளிக்கலவித் துறை சுற்றறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews