காத்திருக்கும் ஆபத்து... ATM பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 26, 2019

காத்திருக்கும் ஆபத்து... ATM பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்.!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இன்று அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஏ.டி.எம் மூலம் ஒன்றிரண்டு நிமிடங்களில் பணத்தை எடுக்கும் வசதி வந்துவிட்டது. வசதிகள் பெருக பெருக, பிரச்சனைகளும் பெருகும் என்பது இதற்கு பொருந்தும். இன்று ஏ.டி.எம் பயன்படுத்தாதவர்களே இல்லை என்றே கூறலாம். பணத்தை பெற வங்கிக்கு செல்வதை காட்டிலும், ஏ.டி.எம்-யை தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம்-ல் நாம் சந்திக்கும் முதல் பிரச்சனை பணத் திருட்டு. ஏ.டி.எம் கார்டின் முதல் பக்கத்தில் இருக்கும் 16 இலக்க எண்ணையும், ஏ.டி.எம் பின்புறத்தில் இருக்கும் 3 இலக்க எண்ணையும்.. உங்களை தவிர வேறு எவருக்கும் தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்.... உங்கள் மொபைலுக்கு நாங்கள் வங்கியில் இருந்து அழைக்கிறோம்... உங்கள் ஏ.டி.எம் கார்டு Expire ஆகிவிட்டது எனக்கூறி இந்த 16 இலக்க எண்ணையும், ஏ.டி.எம் பின்புறத்தில் இருக்கும் 3 இலக்க எண்ணையும் கேட்டால் கொடுத்துவிடாதீர்கள். ஏ.டி.எம் சம்பந்தமாக போன் மூலம் வங்கியில் இருந்து யாரும் தொடர்புகொள்ள மாட்டார்கள். ஆதலால், இதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏ.டி.எம்-ல் நீங்கள் பணம் எடுத்து முடித்தவுடன் Do you want to continue? என்று கேட்கும். இதற்கு நீங்கள் Yes or NO என்பதை கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கீழே Clear, Cancel என்பதை கொடுத்துவிட்டு வர வேண்டும். ஏனெனில் இதன்மூலம் பணம் திருடு போக வாய்ப்புள்ளது. ஆதலால், நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். ஸ்கிம்மர் கருவி என்பது நமது ஏ.டி.எம் கார்டில் உள்ள மேக்னட் சிப்பில் உள்ள நமது டேட்டாக்களை திருடும் கருவி ஆகும். கார்டை நுழைக்கும் இடத்தில் அதை பொருத்தி விட்டு மர்ம நபர்கள் சிறிது தூரத்தில் அமர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் பணம் எடுக்க உங்கள் ஏ.டி.எம் கார்டை நுழைக்கும்போது நொடியில் உங்கள் டேட்டாவை அந்த ஸ்கிம்மர் மெஷின் திருடி விடும். உங்கள் அக்கவுண்டில் பணம் இருப்பதையும் உங்களுக்கான ஏ.டி.எம் ரகசிய குறியீடுகளையும் அது எடுத்துவிடும். இதற்கு எச்சரிக்கையாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஏ.டி.எம் கார்டு நுழைக்கும் இடத்தில் வித்தியாசமாக உணர்ந்தீர்கள் என்றால் ஜாக்கிரதையாக சோதித்த பின்னரே பணம் எடுக்க கார்டை நுழைக்க வேண்டும். இன்று ஆன்ராய்டு போன் வந்தபின் பெரும்பாலானோர் நெட்பேங்கிங்கை தான் பயன்படுத்துகின்றனர். இதிலும் ஹேக்கர்ஸ் வந்து நம் தகவல்களை திருட செய்கின்றனர். வங்கி Website போல் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் திருடுகின்றனர்.
அதனால் நாம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது அது சரியான Website தானா என்பதை சரிபார்க்க வேண்டும். நெட்பேங்கிங் Password-டை தேவையற்ற இடத்தில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாவலர் இல்லாத சாலையோரங்களில் உள்ள ATM-களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதிக பணம் எடுப்பதற்கு வங்கிக்கு செல்வது நல்லது. இயந்திரத்தை சுற்றி வயர்கள், சம்பந்தமில்லாத பொருட்கள் கிடந்தால், செக்யூரிட்டியிடம் உடனே எச்சரிக்கை செய்யலாம். ATM வாசலில் நின்றுக்கொண்டு பணம் எடுக்கப்போவதை செல்போனில் எவ்வளவு பணம் எடுக்கப்போகிறோம் என்பது முதல் பின்(PIN) நம்பர் வரை குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்தால் ஓரளவுக்கு பாதுகாப்பு கிடைக்கும். நாம் பணம் எடுக்கும் போது நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில், எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews