நாளைய சமுதாயம் நிறைவடைய
தொலைகாட்சிகளில் முன்னோடியாக
உலகளவில் முதன்முறையாக கல்வித் துறை கல்வியாளர்கள் உருவாக்கிய
கல்விக்கென சிறப்பு தொலைக்காட்சி
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி.
2. தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் வழி- கல்விக்கான கல்வி, புரட்சி கல்வித் தொலைக்காட்சி. CLICK HERE TO VISIT THE WEBSITE 3. மழலையர் முதல் முதல்நிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறது கல்வித் தொலைக்காட்சி
4. வல்லுநர்கள், கல்வியாளர்கள், மனிதவள வளர்ச்சியில் சிறந்து விளங்கும் முன்னோடிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பாடத்திட்டம் சார்ந்த கருத்துக்களையும், போட்டித் தேர்வுகளுக்கான விளக்கங்ளையும் மனித மேம்பாட்டிற்கான வாழ்க்கை வழிகாட்டிகளையும் ஆழமான புரிந்துணர்தலையும் ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.
6. இக்கல்வித் தொலைக்காட்சி நிலையம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8-வது தளத்தில் நிறுவப்பட்டுள்ளது. CLICK HERE TO VISIT THE WEBSITE 7. கற்றலை இனிமையாக்கி இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலும் கல்வி நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
8. கல்வியும் கலையும் கல்வித் தொலைக்காட்சியின் சீரிய குறிக்கோள் கல்வியோடு ஒழுக்கம், பெரியோர்களை மதித்தல், நேரம் தவறாமை, நாட்டுப்பற்று போன்ற நற்பண்புகளைக் கதைகளாகவும், குறும்படங்களாகவும் தயாரித்து ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
9. தமிழ் செய்யுள் பகுதிகள் மற்றும் ஆங்கில மனப்பாடப் பகுதிகள் போன்றவை மனதைக் கவரும் இசை மற்றும் நடனப் பாடல்களாக, கற்றலை இனிமையாகவும், எளிமையாகவும் மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
10. தமிழகத்தின் அனைத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் நல் ஆதரவுடன் கல்வியின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இக்கல்வித் தொலைக்காட்சி இந்தியா மட்டுமல்லாது, இந்த உலகிற்கே மிகப் பெரிய முன்னோடித் திட்டமாக உருவெடுத்துள்ளது. CLICK HERE TO VISIT THE WEBSITE
