👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 போட்டி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்னென்ன என்று பார்ப்போம்.
CLICK HERE TO WATCH THE VIDEO
மொத்தம் 6 ஆயிரத்து 491 காலியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-4 போட்டித் தேர்வை 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மூன்று மணி நேரம் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள், அரை மணி நேரத்திற்கு முன்னதாக வந்துவிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் தவிர வேறு எதுவும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலம் மற்றும் கருப்பு நிற பால் பாயிண்ட் பென் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேள்வித்தாளில் தேர்வர்கள் எதையும் எழுத கூடாது என்றும் இங்க் பேனாவால் விடைகளை, "ஷேடிங்" செய்வதோ, பென்சில் உபயோகப்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடான செயல்களில் ஈடுபடுவது, ஒருவரை ஒருவர் பார்த்து எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு இன்று நடக்கிறது. 6491 பணியிடத்துக்கு 16.30 லட்சம் பேர் எழுதுகின்றனர். 32 மாவட்டங்களில் இதற்காக 2500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 397 பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 2688, தட்டச்சர், இளநிலை உதவியாளர்(பிணையம்)-104, வரிதண்டலர் (கிரேடு 1)-34, நில அளவர்-509, வரைவாளர்-74, தட்டச்சர்-1901, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)-784 என மொத்தம் காலியாக உள்ள 6491 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அறிவித்தது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். சுமார் 16.30 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குரூப் 4 பணிக்கான எழுத்து தேர்வு 1ம் தேதி(இன்று) நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 32 மாவட்டங்களில் 2500க்கும் அதிகமான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எழுத்து தேர்வில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருக்கும். ஒரு கேள்விக்கு ஒன்னரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். கேள்விகள் பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். தேர்வுக்கு தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள்(அனைத்து வகுப்பினர்) பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் அறையில் மற்ற விண்ணப்பதாரர் விடைத்தாள்களில் இருந்து பார்த்து எழுதினாலோ அல்லது ஏதேனும் முறையற்ற உதவிகளை பெறவோ, முயற்சிக்கவோ கூடாது. அவ்வாறு ஈடுபடுவோர் செயல்கள் கடுமையான தவறாக கருதப்படும். அத்தேர்வர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் விதிமுறைப்படி தண்டனை விதிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் அதிரடி சோதனை நடத்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் தேர்வை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமாக கருதப்படும் மையங்கள் அனைத்தும் வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இருந்து வெப் கேமரா மூலம் தேர்வுகள் கண்காணிப்பட உள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சிறப்பு பஸ்வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மோதிரம், வாட்ச் செல்போனுக்கு தடை:
தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கூடம் மற்றும் அறைகளுக்கு தரவி, கைக்கடிகாரம், மோதிரம் மற்றும் ஏனைய மின்னணு சாதனங்கள், மின்னணு அல்லாத பதிவு கருவிகள், கொண்டு செல்லக்கூடாது. பொருட்களை வைத்திருப்போர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு கூடத்திற்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களான பேனா தவிர வேறு எதையும் கொண்டு செல்லக்கூடாது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு கூடத்திற்கு கொண்டுவர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்பொருட்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர இயலாது.
* மொத்தம் காலியாக உள்ள பணியிடங்கள் 6491
* கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி
* விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை சுமார் 16.30 லட்சம் பேர்
* தேர்வு நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
* தேர்வு மையங்கள் 2500
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U