👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் முதல் நாளில் 317 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிறப்புப் பிரிவினரும், பொதுப் பிரிவில் தரவரிசையில் முதன்மையான இடங்களைப் பிடித்த மாணவர்களும் விரும்பிய கல்லூரிகளைத் தேர்வு செய்தனர்.
மீதமுள்ள 151 இடங்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூ ரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
குறிப்பாக, அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 408 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் உள்ளன. இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. சிறப்புப் பிரிவினரும், கட்- ஆப் மதிப்பெண்கள் 161 வரை பெற்ற மாணவர்களும் அதில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர். மீதமுள்ள இடங்களுக்கு வியாழக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U