ஜீரோ வேஸ்ட் நடைமுறை ஊக்கப்படுத்த சென்னையில் 25ம் தேதி குப்பை திருவிழா: மாணவர்கள் கலந்துகொள்ளலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

ஜீரோ வேஸ்ட் நடைமுறை ஊக்கப்படுத்த சென்னையில் 25ம் தேதி குப்பை திருவிழா: மாணவர்கள் கலந்துகொள்ளலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னை மாநகராட்சியில் ஜீரோ வேஸ்ட் நடைமுறை ஊக்கப்படுத்த வரும் 25ம் தேதி குப்பை திருவிழா நடக்கிறது. இதில் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொள்ளலாம். சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை அனைத்தும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி கிடங்கில் கொட்டப்படுகிறது. இவற்றில் 384 டன் மக்கும் குப்பை பல்வேறு முறைகள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதை தவிர்த்து, சென்னை மாநகராட்சி பூங்காக்களில் உருவாகும் குப்பை அந்த இடத்திலேயே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், குப்பையை 100 சதவீதம் தரம் பிரித்து வழங்குதல் மற்றும் அவற்றை முறையாக மறுசுழற்சி செய்யும் முறையை (ஜீரோ வேஸ்ட் ) ஊக்கப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் குப்பை மறுசுழற்சி செய்வது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குப்பை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
சிட்டிசன் கன்சியூமர் அண்டு சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகிறது. அதன்படி 6வது குப்பை திருவிழா வரும் ஆக.25ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா நகர் டவர் பூங்காவில் நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு “ரேஸ் டூ ஜீரோ வேஸ்ட்” என்ற தலைப்பில் 5 கி.மீ ஓட்டப்பந்தம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் கண்காட்சியில் குப்பை மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொடர்பாக பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும். இதை தவிர்த்து பயிலரங்கமும் நடத்தப்பட உள்ளது. இதன்பிறகு 10 மணி முதல் மாலை 4 மணி வரை கேள்வி - பதில் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதில் திடக்கழிவு மேலாண்மை வல்லுனர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்பேட்டி, மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வியாபாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆக. 20ம் தேதிக்குள் kuppaimatters@gmail.com என்ற இமெயில் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews