தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் உயர்த்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தவிர மற்ற பள்ளிகளில் இதைவிட கட்டணம் அதிகம் வசூலிப்பதாகவும் சிபிஎஸ்இ குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, இரண்டு நாட்களாக நாடு முழுவதும் பெற்றோர் தரப்பில் சிபிஎஸ்இக்கு கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சிபிஎஸ்இ சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்வுக் கட்டணம் என்பது டெல்லியில் மட்டும் உயர்த்தவில்லை. நாடு முழுவதும்தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. இதை பலர் தவறாக சித்தரிக்கின்றனர். கடந்த ஆண்டில் ஒரு முறைகூட தேர்வுக் கட்டணம் உயர்த்தவில்லை. உயர்த்தப்பட்ட கட்டணம் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பொருந்தும்.
இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருந்து பதிவு செய்துள்ளவர்களுக்கும் பொருந்தும். சிபிஎஸ்இயின் நிர்வாக குழுவின் பரிந்துரையின்பேரில்தான் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுப்பிரிவினர் 5 பாடங்களுக்கு 750 செலுத்தி வந்தனர். ஆனால், இப்போது 1500 செலுத்த வேண்டும். இது ஒரு பாடத்துக்கு ₹300 தான். ஆனால், கண்பார்வையற்றவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. சிபிஎஸ்இ, தவிர்த்த தேசிய திறந்த நிலைப் பள்ளிகளில் உயர்நிலைக் கல்வி படிப்போருக்கு, ேதர்வுக் கட்டணம் என்பது மாணவர்களுக்கு 1800, மாணவியருக்கு 1450, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 1200 என்று நிர்ணயித்துள்ளனர். மேனிலைக் கல்வியில் மேற்கண்ட அடிப்படையில் மாணவர்களுக்கு 2000, மாணவியருக்கு 1750, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 1300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒவ்வொரு கூடுதல் பாடங்களுக்கும் தலா 720 செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளில் அப்படி இல்லை என்றும், ‘‘இது சுயநிதி நிர்வாக அமைப்பு, இதன் பணிகள் லாப நோக்கம் இல்லாதது’ என்றும் சிபிஎஸ்இ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews