எம்.பி.ஏ., எம்.சி.ஏ., தரவரிசை பட்டியல் வெளியீடு: வரும் 17ம் தேதி கவுன்சலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., தரவரிசை பட்டியல் வெளியீடு: வரும் 17ம் தேதி கவுன்சலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பொள்ளாச்சி, சென்னை மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மேலும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 17ம் தேதி முதல் 28ம் தேதி நடக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல மையங்கள், அண்ணா பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அரசு இட ஒதுக்கீட்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) நடக்கிறது.இந்நிலையில், டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் கோவை ஜிசிடி கல்லூரியில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மற்றும் தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை செயலாளர் தாமரை வெளியிட்டார். இதில், எம்.பி.ஏ. படிப்புக்கான தரவரிசையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி ஸ்வரூபா (டான்செட் மதிப்பெண்-82.000) முதலிடம் பிடித்தார். சென்னையை சேர்ந்த மாணவி கார்த்திகா பிரியா (81.333) 2-வது இடமும், பிரசன்ன குமார் (79.000) 3-வது இடமும் பிடித்தனர். எம்.சி.ஏ. படிப்புக்கான தரவரிசையில் சென்னையை சேர்ந்த மாணவி அர்ச்சனா (டான்செட் மதிப்பெண்-73.667) முதலிடமும், மதுரையை சேர்ந்த மாணவி தர்ஷினி (72.667) 2-வது இடமும், சென்னை மாணவர் பிரதீப்ராம் (66.000) 3-வது இடமும் பிடித்துள்ளனர்.
இது குறித்து கோவை ஜிசிடி கல்லூரியின் முதல்வர் தாமரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புளுக்கான தரவரிசை பட்டியல் இன்று (நேற்று) www.gct.ac.in மற்றும் www.tn-mbamca.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எம்.சி.ஏ., படிப்புக்கான கலந்தாய்வு வரும் 17ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. எம்.சி.ஏ. பிரிவில் ரெகுலர் மற்றும் லேட்டரல் என்ட்ரி என இரண்டிற்கும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு, 801 மாணவர்களும், 727 மாணவிகளும் என மொத்தம் 1,528 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்.பி.ஏ. படிப்புக்கான கலந்தாய்வு வரும் 21ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு, 3,351 மாணவர்கள், 3,153 மாணவிகள் என 6,504 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதமும் மேற்கண்ட இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அதை மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கலந்தாய்வு தேதி, நேரம் குறித்த விவரங்கள் மாணவ-மாணவிகள் பதிவு செய்த செல்போனுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும்.
மேலும், டான்செட் நுழைவுத்தேர்வு எழுதி, இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு துணை கலந்தாய்வு நடக்கிறது. இதன்படி, இந்த துணை கலந்தாய்வு எம்.சி.ஏ. படிப்புக்கு 21ம் தேதியும், எம்.பி.ஏ. படிப்புக்கு 28ம் தேதியும் நடக்கிறது. இதில், பொது கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ள இயலாதவர்கள், கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள், இணையதளத்தில் பதிவு செய்தும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் ஆகியோர் தங்களுடைய அசல் சான்றிதழ்களுடன் மேற்கண்ட தேதிகளில் நேரில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.5,300, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.1,150 செலுத்த வேண்டும். இதை ரொக்கமாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்தலாம். வரைவோலையாக செலுத்த விரும்புபவர்கள் தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை 2019, அரசு தொழில்நுட்ப கல்லூரி (ஜி.சி.டி.), கோயம்புத்தூர்-13 என்ற முகவரிக்கு கோவையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து, கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews