மாணவர் சேர்க்கை குறைவு: நூலகங்களாக மாற்றப்பட்ட 46 அரசுத் தொடக்கப் பள்ளிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

மாணவர் சேர்க்கை குறைவு: நூலகங்களாக மாற்றப்பட்ட 46 அரசுத் தொடக்கப் பள்ளிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் ஒற்றை எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகள் தற்போது நூலகங்களாக மாறியுள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளி களுக்கு நியமிக்கப்பட்டு வரு கின்றனர். இதற்கிடையே, குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் இல்லாத அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு திட்ட மிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய பள்ளிகளை மூடாமல், அங்கு நூலகம் அமைப்பதற்கு நூலகத் துறைக்கு கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் நூலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்த சுற்றறிக்கை கடந்த ஜூலை 31-ம் தேதி நூலகத் துறையால் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 6 பள்ளிக் கட்டடங்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வேலூர், சிவகங்கையில் தலா 4 பள்ளிகளிலும், விருதுநகர், திருவண்ணாமலை, திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 3 பள்ளி களிலும் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், தூத்துக் குடி, புதுக்கோட்டை, கரூர், திண் டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளிகளிலும், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மற்றும் கோவை யில் தலா 1 பள்ளியிலும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இங்கு நூலகங்களில் 500 புத்தகங்கள் இடம்பெறும். இந்தநூலகம் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை செயல்படும். பிளஸ் 2-வுடன் சிஎல்ஐஎஸ் படித்தவர்கள், ரூ.315 தினக்கூலி அடிப்படையில் இங்கு தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுவர். பள்ளிக் கட்டடங்களில் அமைக்கப்படும் நூலகத்தால் ஏற்படும் செலவுகள், நூலக ஆணைக் குழு நிதியில் இருந்து பார்த்துக் கொள்ளப்படும். 46 இடங்களிலும் புதிய நூலகங்கள் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணிகளை ஆக.10-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த சில தினங்களுக்குள் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும். இதைத் தொடர்ந்து அந்த 46 பள்ளிகளும் இனி நூலகங்களாக செயல்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews