தினமும் ஒரு திருக்குறளை மனப் பாடமாகச் சொல்லும் மாணவருக்கு ரூ.10 பரிசு, 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு! 20 ஆண்டாகத் தொடரும் வலையங்குளம் முதியவரின் சேவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 16, 2019

தினமும் ஒரு திருக்குறளை மனப் பாடமாகச் சொல்லும் மாணவருக்கு ரூ.10 பரிசு, 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு! 20 ஆண்டாகத் தொடரும் வலையங்குளம் முதியவரின் சேவை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அறிவிப்பு பலகையில் தினமும் ஒரு குறள்: 20 ஆண்டாகத் தொடரும் வலையங்குளம் முதியவரின் சேவை தினமும் ஒரு திருக்குறளை மனப் பாடமாகச் சொல்லும் மாணவருக்கு ரூ. 10 பரிசு, 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் அரசு பள்ளி மாணவர் களுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு, தான் எழுதும் குறளில் பிழையறிந்து சொல்வோருக்கு ரூ.500 பரிசு என 20 ஆண்டுகளாக திருக்குறளுக்காக சேவையாற்றி வருகிறார் வலையங் குளம் கூ.கிருஷ்ணன். மதுரை மாவட்டம், வலையங் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூ. கிருஷ்ணன் (72). திருக்குறளால் ஈர்க்கப்பட்டவர். அதனை மாணவர்கள், மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், ஊரில் உள்ள அறிவிப்பு பலகையில் தினமும் ஒரு குறளை எழுதி விழிப்புணர்வு செய்து வருகிறார். அதில் எழுதும் குறளை மனப் பாட மாகச் சொல்லும் மாணவர்களுக்கு 10 ரூபாய் பரிசும், திருக்குறள் புத்தகமும் வழங்கி வருகிறார். திருவள்ளுவர் தினத்தை ஊர்மக்களின் ஒத்துழைப் போடு திருவிழாவாக கொண்டாடி வருகிறார். இதனால் இவரை அக்கிராமத்தினர் ‘திருக்குறள் தாத்தா’ என அன்போடு அழைக்கின்றனர். இதுகுறித்து கூ.கிரு ஷ்ணன் கூறியதாவது: 1947-ல் பிறந்த நான் திண்ணைப் பள்ளியில்தான் படித் தேன். ஆண்டுக்கு 10 மரக்கா நெல் (40 படி நெல்) சம்பளம் கொடுத்து முத்துச்சாமி வாத்தியாரிடம் என்னைப் படிக்க வைத்தனர். அவரிடம் 2 ஆண்டு படித்தேன். விவசாயம் மற்றும் பல கைத் தொழில்கள் செய்தபோதும், புத்தக வாசிப்பை விடவில்லை. அறிவியல் தொடர்பான புத்தகம் வாசித்து பகுத் தறிவை வளர்த்துக் கொண்டேன். அதேபோல, திருக்குறளில் உள்ள பகுத்தறிவு கருத்துகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அறி விப்பு பலகையில் திருக்குறளை எழுத ஆரம்பித்தேன். பின்னர் திருக்குறள் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை 1999-ல் ஊர்க்காரர்கள் துணையோடு தொடங்கினோம். எப்போதும் பையில் திருக்குறள் புத்தகங்களோடு தான் செல்வேன். வழியில் காணும் பிள்ளைகளிடம் திருக்குறளை சொல்லக் கேட்டு புத்தகங்கள் பரிசு வழங்குவேன். இந்த புத்தகங்களை தமிழறிஞர்கள் பலர் நன்கொடையாக தருகின்றனர். மாணவர்கள் மனதில் திருக்குறளை பதிய வைக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை அறிவிப்பேன். தினமும் எழுதும் குறளை ஒப்புவிக்கும் மா ணவர்களுக்கு ரூ.10 பரிசு, விளக்கம் சொன்னால் ரூ. 2 பரிசு, எழுதும் குறளில் பிழையை கண்டுபிடிப்போருக்கு ரூ. 500 பரிசு, 1330 குறளையும் மனப்பாடமாக சொல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு (5 கிமீ சுற்ற ளவுக்குள்) ரூ. 10 ஆயிரம் பரிசு என பல்வேறு போட்டிகள் மூலம் திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்கிறேன். பள்ளிகள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். மேலும், திருவள்ளுவர் தின விழாவை ஊர்மக்கள் ஆதரவோடு 300 மாணவர்களுக்கு பரிசுகள், திருக்குறள் புத்தகங்களுடன் கொண் டாடி வருகிறோம். அதேபோல், வரும் சனிக்கிழமை உலக தமிழ்ச்சங்கத்தில் எங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாண வர்களுக்கு திருக்குறள் திறனறியும் போட்டி நடைபெற உள்ளது. இவ் வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews