Instagram தொழில்நுட்ப பிழையை சுட்டிக்காட்டிய தமிழருக்கு ரூ. 20 லட்சம் வெகுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

Instagram தொழில்நுட்ப பிழையை சுட்டிக்காட்டிய தமிழருக்கு ரூ. 20 லட்சம் வெகுமதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஸ்டகிராம் செயலியில் இருந்த தொழில்நுட்ப பிழையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தமிழர் ஒருவருக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தை அந்நிறுவனம் வெகுமதியாக வழங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியாளரான லக்ஷ்மண் முத்தையா இன்ஸ்டகிராம் செயலியின் கட்டுமானத்தில் தொழில்நுட்ப பிழை உள்ளதாகவும் அதன் மூலம் எந்த ஒரு பயனர்களின் கணக்கையும் எளிதில் ஹேக் செய்ய முடியும் எனவும் கண்டுபிடித்தார். மேலும் இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்து சென்ற அவர் இன்ஸ்டகிராமில் மறந்துபோன பாஸ்வேடுகளை திரும்பப்பெறும் அமைப்பில் தொழில்நுட்ப பிழை இருப்பதாக சுட்டிக் காட்டினார்.
மேலும் பயனர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் கன்பர்மேஷன் மெசேஜ் அமைப்பில் தொழில்நுட்ப பிழை இருப்பதாகவும் அதன்முலம் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்ய முடியும் எனவும் லக்ஷ்மண் முத்தையா சுட்டிக் காட்டியிருந்தார். மேலும் இதையடுத்து அந்த பிழையானது சரி செய்யப்பட்டுள்ள நிலையில் தவறை சுட்டிக்காட்டி உதவியதற்காக அந்நிறுவனம் லக்ஷ்மண் முத்தையாவிற்கு சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தை வெகுமதியாக வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிடும் புகைப்படங்களை அவருக்கு தெரியாமலேயே மற்றவர்கள் நீக்கிக் கொள்ளகூடிய பாதுகாப்பற்ற தன்மை இருப்பதை சுட்டிக்காட்டி ஏற்கனவே இவர் பண வெகுமதியை பெற்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews