👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கவ்வி - தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் 6029அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்துதல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்!
தமிழகத்தில் 6,029 அரசு பள்ளிகளில் இணையதள வசதியுடன் ஹைடெக் கம்யூட்டர் லேப் அமைக்கப்படவுள்ள நிலையில், இடம் இல்லையென அதற்கான உபகரணங்களை வாங்க மறுக்க கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேல்நிலை வகுப்பு படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், அனைத்து பள்ளிகளிலும் ஹைடெக் கம்யூட்டர் லேப் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 3,090 உயர்நிலைப்பள்ளி மற்றும் 2,939 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 6,029 பள்ளிகளில், லார்சன் அன்ட் டர்போ நிறுவனம் மூலம் ஹைடெக் லேப் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக உயர்நிலை பள்ளிகளுக்கு தலா 10 கம்யூட்டர் உள்பட 12 உபகரணங்களும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20 கம்யூட்டர் உள்பட 12 உபகரணங்களும் அனுப்பப்பட்டு வருகிறது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் 4 பள்ளிகள் மற்றும் திருவள்ளூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூரில் தலா ஒரு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இந்த உபகரணங்களை வாங்க மறுத்துள்ளனர். இத்திட்ட நடைமுறை தெரியாது என மறுத்த அவர்கள், போதிய இடம் இல்லாததால் லேப் அமைக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிஇஓக்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, உரிய இடத்தை தேர்வு செய்து, லேப் அமைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், இத்திட்டத்தின் நடைமுறை பற்றி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தலைமை ஆசிரியர் கூட்டத்தில், பொருள் நிரலில் வைத்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, லார்சன் அன்ட் டர்போ நிறுவனத்தினர் பள்ளிக்கு வரும்போது, முழு ஒத்துழைப்பு வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். பொறுப்பு ஆசிரியர் ஒருவரை நியமித்து, பள்ளி விடுமுறை நாட்களிலும், கணினி மற்றும் உபகரணங்களை நிறுவ ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இத்திட்டத்தின் நிலவரம் பற்றி அறிக்கை தயாரித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் உள்ள 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப வசதிகளுடன் ஆய்வகங்கள் அமைக்கும் பணி எல் அண்ட் டி நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் 10 கணினிகள் உள்பட 12 உபகரணங்களும், ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும் 20 கணினிகள் உட்பட 12 உபகரணங்களும், விநியோகம் செய்யப்பட்டு நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், மேற்கண்ட பொருள்களை விநியோகிக்கும் போது சில பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இத்திட்டத்தின் நடைமுறைகள் பற்றி தெரியாது எனவும், பள்ளிகளில் போதுமான இடவசதிகள் இல்லை எனக்கூறி மறுப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும். எனவே, போதுமான இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வகம் அமைக்க ஏதுவான இடத்தை தலைமையாசிரியர் ஒத்துழைப்புடன் தேர்வு செய்ய வேண்டும். இதுதவிர,
அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் இந்தத் திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களை சுற்றறிக்கை மூலம் முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
இந்தத் திட்ட செயலாக்கத்துக்கு தனியார் நிறுவனத்தினர் பள்ளிக்கு வரும்போது முழு ஒத்துழைப்பு வழங்கி பணிகளை விரைவாக முடிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U