அத்தி வரதர் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? Click Here For Booking - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 22, 2019

அத்தி வரதர் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? Click Here For Booking

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் விற்பனையை இந்து அறநிலையத் துறை இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரத பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் தரிசனத்திற்கு கோயில் நிற்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் 1979ம் ஆண்டுக்கு பின்னர் இந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். அத்திவரதரைப் பார்க்க தமிழ்நாடு மட்டுமில்லாமல், இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள் என கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறை எதிர்பார்த்தது.
கோயில் நிர்வாகம் ஒட்டுமொத்தமாக 48 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தான் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், தினமும் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். வார விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் கூடுதலாக இருக்கின்றது. சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்: பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், வேகமாக சுவாமி தரிசனம் செய்யும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றது. அந்த வகையில் ஆன்லைன் முன்பதிவு செய்து அத்திவரதரை தரிசனம் செய்யும் வகையில் இந்து அறநிலையத் துறை அமைச்சகம் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிதாக சிறப்பு தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் வழங்கும் வகையில் இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்(CLICK HERE) (குறிப்பு: பக்தர்கள் பலர் இணையதள வழி டிக்கெட் முன்பதிவு செய்வதால் இந்து அறநிலைய இணையதளம் சற்று மெதுவாக செயல்படும். பொறுமையுடன் காத்திருந்து டிக்கெட் முன் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews