Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 22, 2019

Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Income Tax படிவங்களை முறையக நிரப்பி, வருமான வரித் துறையிடம் சமர்பிக்க, இன்னும் சரியாக ஒன்பது நாட்கள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன. இந்த நேரத்தில் கூட யாருக்கு எந்த வருமான வரிப் படிவம் என்பதில் சில குழப்பங்களும் தயக்கங்களும் நம் மக்களிடத்தில் இருக்கிறது. ஆக இந்த கட்டுரையில் யாருக்கு எந்த வருமான வரிப் படிவம் என்பதை கூடுமான வரி எளிமையாக விளக்க இருக்கிறோம்.
Income Tax படிவம் 1 இந்தியாவில் வாழும் தனி நபர்கள், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானமாக பெறுபவர்கள், அந்த 50 லட்சம் ரூபாயை சம்பளம் வழியாகவோ, ஒரு வீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் வழியாகவோ, வங்கிகளில் செய்திருக்கும் டெபாசிட்களுக்கு பெறும் வட்டியாகவோ, ஆண்டுக்கு 5,000 ரூபாய் வரை விவசாய வருமானம் பெறுபவராகவோ இருந்தால் அவர்கள் இந்த படிவத்தைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பு: பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள் மற்றும் ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர்கள் இந்த படிவத்தைப் பயன்படுத்தக் கூடாது
Income Tax படிவம் 2 மேலே படிவம் 1-ல் தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியாத தனி நபர்கள், இந்து கூட்டுக் குடும்ப அமைப்புகள் இந்த படிவம் 2-ஐப் பயன்படுத்தி தாக்கல் செய்யலாம். பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள் மற்றும் ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர்கள் இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: ஆனால் இவர்களுக்கு பிசினஸ் அல்லது பட்டையக் கணக்காளர், மருத்துவர், வழக்கரிஞர் போன்ற ப்ரொஃபஷனல் தொழில்களில் இருந்து வருமானம் வரக் கூடாது.
Income Tax படிவம் 3 பிசினஸ் அல்லது மருத்துவர், வழக்கறிஞர், ப்ரொஃபஷனல் தொழில்களில் இருந்து வருமானம் ஈட்டும் தனி நபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்ப அமைப்புகள் இந்த படிவத்தைப் பயன்படுத்தி தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த படிவத்தில் தான் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

Income Tax படிவம் 4 தனி நபர்கள், இந்து கூட்டுக் குடும்ப அமைப்புகள் மற்றும் LLP அல்லாத நிறுமங்கள் (Firm) இந்த படிவத்தைப் பயன்படுத்தி தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம். குறிப்பு: இவர்களின் பிசினஸ் வருமானம் அல்லது ப்ரொஃபஷனல் தொழில் வருமானங்களை வருமான வரிச் சட்டம் 44AD, 44ADA, 44AE பிரிவில் கீழ் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
Income Tax படிவம் 5 தனி நபர்கள், இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் Income Tax படிவம் 7-ஐப் பயன்படுத்துபவர்கள் ஆகியோர்களைத் தவிர மற்றவர்கள் இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம்.
Income Tax படிவம் 6 வருமான வரிச் சட்டப் பிரிவு 11-ன் கீழ் விலக்கு கேட்கும் நிறுவனங்களைத் தவிர, மற்ற நிறுவனங்கள் இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம்.
Income Tax படிவம் 7 வருமான வரிச் சட்டம் பிரிவு 139(4A) or 139(4B) or 139(4C) or 139(4D)-ன் கீழ் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்கள் (நிறுவனங்கள் உட்பட) இந்த வருமான வரிப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews