மரம் நடவும், வெட்டவும் மாணவர் படை: அமைச்சர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

மரம் நடவும், வெட்டவும் மாணவர் படை: அமைச்சர் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''மரம் நடுதல் மற்றும் பலத்த காற்றால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு, மாணவர் சிறப்பு படை உருவாக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் அறிவித்துள்ளார்.சட்டசபையில், அவரது அறிவிப்புகள்: நீர்வள ஆதாரங்களின் நீர் இருப்பு, உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர் வினியோக நிலவரம், மழையளவு, வெள்ள பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை கண்டறியவும், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நீராதார தகவல் மற்றும் மேலாண்மை இணையதளம் உருவாக்கப்படும் இடி, மின்னல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 10 லட்சம் ரூபாய் செலவில், குறும்படங்கள் தயாரிக்கப்படும் திருவாரூர், செருகளத்துார் கிராமத்தில், 40 ஆயிரம் மரங்கள் மற்றும் மூலிகை செடிகளுடன் கூடிய மரப்பூங்கா, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சிட்டா மேம்படுத்தும் சிறப்பு திட்டம், 1 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் மரம் நடுதல் மற்றும் பலத்த காற்றால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு, மாணவர் சிறப்பு படை உருவாக்கப்படும். 114 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில், திருத்தம் செய்து, நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் கிராம வரைபடங்களை, 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, இ - சேவை மையங்களில், பொது மக்கள் பெறும் வசதி செய்யப்படும் வி.ஏ.ஓ.,க்கள், 9,633 பேருக்கு, 23 கோடி ரூபாய் செலவில், 'லேப்டாப்'கள் வழங்கப்படும் மத்திய அரசிற்கும், பிரிட்டிஷ் துாதரகத்திற்கும் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ், பேரிடர் அபாய குறைப்பு மற்றும் தணிப்பை வலுப்படுத்த, சென்னை, கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews