நன்றாக படித்ததால் மாணவி பலாத்காரம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

நன்றாக படித்ததால் மாணவி பலாத்காரம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தங்களை விட நன்றாக படித்ததால், எட்டாம் வகுப்பு மாணவியை, அதே பள்ளியில் படிக்கும் அவரது உறவுக்கார மாணவர்கள் நான்கு பேர், கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள சீதாபுரில், 14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அதே பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பம் ஒரு ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த நான்கு மாணவர்களும், அந்த மாணவியின் உறவினர்கள். இது குறித்து, போலீசார் கூறியதாவது: இந்த சிறுமி மற்றும் அவரை பலாத்காரம் செய்த நான்கு மாணவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கூட்டுக் குடும்பமாக உள்ளனர். மாணவி, நன்கு படிக்கக் கூடியவர். அதே நேரத்தில், இந்த மாணவர்கள், படிப்பில் சோபிக்கவில்லை. அதனால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், அந்த மாணவர்களை கண்டித்துள்ளனர். தங்களைவிட நன்கு படிப்பதால், அந்த மாணவியை பழிவாங்க, இந்த மாணவர்கள் திட்டமிட்டனர். உணவில் மயக்க மருந்தைக் கொடுத்து, பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்துள்ளனர். இதுபோல், பலமுறை நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும், அதை, 'வீடியோ' எடுத்துள்ளனர். '
வாட்ஸ் ஆப்' இதை பள்ளி ஆசிரியர் ஒருவர் பார்த்துள்ளான். கண்டிக்க வேண்டிய அவன், மாணவர்களுடன் சேர்ந்து, அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். சமீபத்தில், இந்த மாணவர்களில் ஒருவன், பலாத்கார வீடியோவை, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ள குழுவுக்கு அனுப்பியுள்ளான். அதன்பிறகே, இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. அந்த மாணவிக்கும், தான் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவில்லை. மைதானத்தில் மயங்கி விட்டதாகவும், அதனால், ஆசிரியர் அறையில் படுக்க வைத்ததாகவும், அந்த மாணவர்கள் கூறி, சமாளித்து வந்துள்ளனர். புகாரின் அடிப்படையில், இந்த நான்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews