Breaking

Monday, July 15, 2019

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் NEXT என்ற தேர்வு நடத்தி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்றுகின்றனர். இதையடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக national exit test (NEXT) என்ற நெக்ஸ்ட் தகுதி தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்பவர்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்களுக்கு எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் எப்எம்ஜிஇ என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும். பின்னர் நீட் தேர்வு எழுதி மருத்துவ மேற்படிப்புகள் படிக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவதால் வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் இனிமேல் எப்எம்ஜிஇ தேர்வை எழுத தேவையில்லை. நெக்ஸ்ட் தேர்வை மட்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog