Breaking

Monday, July 15, 2019

எதிர்ப்பை மீறி இந்தி, ஆங்கிலத்தில் நடந்தது தமிழ் இல்லாமல் தபால் துறை தேர்வு: ஐகோர்ட் உத்தரவுக்கு பின் ரிசல்ட் வெளியாகும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ் இல்லாததால் சர்ச்சையான தபால்துறை தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தொடங்கியது. 1,039 பணியிடங்களுக்காக தேர்வில் வினாக்கள் ஆங்கிலம், இந்தியில் இடம்பெற்றுள்ளன. தபால்துறை உதவியாளர், வகைப்படுத்துநர் உதவியாளர் பணியிடங்களுக்காக மத்திய அரசு தேர்வு நடத்துகிறது. கடும்கஎதிர்ப்பையும் மீறி தபால் துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழில் கேள்விகள் இல்லாததால், பலர் விடை எழுத முடியாமல் அதிருப்தி அடைந்தனர். இன்றும் தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவுகள் வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளதால் அதன் உத்தரவுக்கு பின்னர் வெளியாகும்.
இந்திய தபால் துறையின்கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தபால் நிலையங்களில் காலியாக உள்ள தபால்காரர், மெயில் கார்டு, உதவியாளர், பன்முகத் திறன் ஊழியர் உள்பட பல்வேறு பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் அந்தந்த மாநில மொழிகள் மற்றும் இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் கேள்வி கேட்கப்படும். இந்நிலையில் கடந்த 2015ல் நடந்த போட்டித் தேர்வில் தமிழகத்தில் தேர்வு எழுதிய வெளிமாநில நபர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தனர். இது தமிழக ஊழியர்கள், மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தமிழ் மொழியே தெரியாத பீகார், அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எப்படி தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றும் கேள்வி எழுந்தது. இதனால், கடந்த 4 வருடங்களாக தபால் துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக தபால் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமானது. அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்ததன் காரணமாக போட்டித் தேர்வு நடத்த மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் ஏற்கெனவே இருந்த தேர்வு நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தான் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அஞ்சல் துறை எழுத்தர் மற்றும் ஏற்கனவே பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு, மற்றும் பன்முகத் திறன் கொண்ட ஊழியர்களுக்கான தேர்வு, தபால்காரர் பதவி உயர்வுக்கான தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பும் வெளியானது. அதன்படி, மத்திய தொலை தொடர்பு துறை கடந்த 11ம் தேதி அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
தபால் துறை தேர்வுகள் நடக்கும் போது முதல் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில்தான் கேள்வித்தாள் இடம் பெறும் என்றும் இரண்டாவது தேர்வில் தான் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெறும், 2ம் தாளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டது. இந்த அறிவிப்பால் தேர்வு எழுதும் நபர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், சமூக நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகளையும்மீறி, அறிவித்தபடி தபால் துறை தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற்றது. அஞ்சல் துறையில் ஏற்கனவே பணியாற்றும் 989 பேர் பதவி உயர்வு வேண்டி இந்த தேர்வில் பங்கேற்றனர். நேற்று காலை தொடங்கிய இந்த தேர்வு 3 மணி நேரம் நடந்தது. போஸ்டல் ரூல்ஸ் 50 மதிப்பெண், ரீசனிங் 20 மதிப்பெண்கள், கணிதம் 20 மதிப்பெண்கள், பொது அறிவு 10, மொழிபெயர்ப்புக்கு 50 என மொத்தம் 150 மொத்த மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய முதல் தாள் தேர்வில் 100 மதிப்பெண்ணுக்கான கேள்விகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் கேட்கப்பட்டு இருந்தன. இதனால் தேர்வு எழுதியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பதவி உயர்வுக்காக தேர்வில் பங்கேற்ற பலர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படையாக கொண்டவர்கள் என்பதால், நேற்றைய தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் படித்துப்பார்த்து புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். இரண்டாம் தாளுக்கு மொத்தம் 50 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் அந்தந்த மாநில மொழியில் இடம் பெறுகிறது. இரண்டாம் தாளில் குறைந்தது 40 மதிப்பெண்கள் முழுவதுமாக எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சென்னையில் 150 பேர் எழுதினர். இதுகுறித்து, தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு தான் இந்த தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வு 10ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது. பெரும்பாலானோர் அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்து வந்தோம். பலருக்கு ஆங்கிலம் முழுவதுமாக தெரியாது. தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்த தபால் துறை தேர்வுகளில் தமிழில் கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் எளிதாக கேள்விகளை புரிந்துகொண்டு பதிலளிக்க முடிந்தது. ஆனால், இந்த தேர்வில் ஆங்கிலம், இந்தியில் கேள்விகள் கேட்கப்பட்டதால் கேள்விகளை புரிந்துகொள்ள முடியவில்லை. இது எங்களுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. பதில்கள் தெரிந்தும் கேள்விகள் புரியாததால் 50 சதவீத கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டோம்.
குறிப்பாக கணிதம் மிகவும் கடினமாக இருந்தது. இனி வரும் காலங்களில் இந்த நடைமுறையை தவிர்த்து தமிழிலும் கேள்வித்தாளை வழங்கினால் தமிழகத்தில் உள்ளவர்கள் எளிமையாக தேர்ச்சி பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். ⭕⭕2015ல் நடந்த தேர்வில் தமிழகத்தில் வெளிமாநில நபர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தனர். இது கேள்விக்குறியை எழுப்பியது. ⭕⭕முதல் நாள் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில்தான் கேள்வித்தாள் இடம் பெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ⭕⭕இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது; ‘தேர்வு நடந்தாலும் ரிசல்ட் அறிவிப்பை வெளியிட மதுரையில் உள்ள ஐகோர்ட் கிளை தடை விதித்தது. ⭕⭕இந்த நிலையில் நேற்று, முதல் தேர்வு தமிழ் இல்லாமல் நடந்து முடிந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog