ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் சம்பள உயர்வு கேட்கும் பகுதிநேர ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 14, 2019

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் சம்பள உயர்வு கேட்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சம்பள உயர்வு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி 2012 மார்ச்சில் தொகுப்பூதியம் அடிப்படையில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தொகுப்பூதியத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர். பணியமர்த்தப்பட்டபோது 5ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாகவும், பின்னர் சம்பள உயர்வாக 2014 ஏப்ரலில் 2ஆயிரமும், 2017 ஆகஸ்டில் 700ரூபாய், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியாலும் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டது. இதனால் தற்போது 7 ஆயிரத்து 700 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.இவர்கள் நீண்ட காலமாக பணிநிரந்தரம் செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அடுத்து பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய 3 மாதத்துக்குள் குழு ஒன்று அமைத்து தீர்வு காணப்படும் என்று 2017 ஜூன் மாதம் சட்டசபையில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பணிநிரந்தர அறிவிப்பு காலதாமதம் ஆகி வருவதால் அதுவரையில் குறைந்தபட்சமாக 15ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க வேண்டும்.
10 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வு, அதனுடன் 7வது ஊதியக்குழு 30 சதவீத ஊதிய உயர்வு கணக்கிட்டு வழங்கினால் இவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குதற்கு தனியே அரசுக்கு நிதி இழப்பு ஏற்படாது. மேலும் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களின் நிதியினை தற்போது பணிபுரிந்து வரும் 12ஆயிரம் பேருக்கு பகிர்ந்து வழங்கினாலே போதும்.ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த நாட்களில் அரசின் உத்தரவின்படி பள்ளிகளை திறந்து நடத்தி அரசுக்கு ஆதரவாக இருக்கும் இந்த பகுதிநேர ஆசிரியர்களை குடும்பநலன் மற்றும் எதிர்கால வாழ்வாதாரம் மேம்பட 110விதியின் கீழ் முதல்வர் சம்பள உயர்வையாவது அறிவித்திட வேண்டும். இவ்வாறு செந்தில்குமார் கூறியுள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews