👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உயர் கல்வியில் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் தடுமாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் தாக்கம் பொறியியல் கல்வியில் எதிரொலித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 126 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் 225 முதுநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. தொழில் வளர்ச்சி இல்லாததால் வேலைவாய்ப்பு இல்லை. இதுவே இந்த நிலைக்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் (2019-20) இருந்து 79 பொறியியல் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைகள் என மொத்தம் 133 முதுநிலை பட்டப்படிப்புகளையும் 66 இளநிலை பட்டப்படிப்புகளையும் நிறுத்திவிட்டன. கல்லூரியில் ஒரு முதுநிலை பட்டப்படிப்பு நடத்த வேண்டும் என்றால், குறைந்தது 3 ஆசிரியர்கள் தேவை. மேலும் ஆசிரியர்- மாணவர் விகிதாச்சார விதிகள் தளர்த்தப்பட்டதால், பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலைக்கு சென்றுவிட்டது. ஆட்கள் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களை தேர்வு செய்ய விரும்புவதில்லை. இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களே போதும் என்று கருதுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே முதுநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்துவிட்டது.” என்று பொறியியல் கல்லூரி முதல்வர் ஒருவர் கூறினார். சென்னையில் உள்ள பிரபலமான சில பொறியியல் கல்லூரிகளேகூட முதுநிலை பட்டப்படிப்புகளை நிறுத்திவிட்டன.
கடந்த கல்வியாண்டிலேயே (2018-19) 47 பொறியியல் கல்லூரிகள் தாங்கள் நடத்தி வந்த 92 முதுநிலை பட்டப்படிப்புகளையும் 42 இளநிலை பட்டப்படிப்புகளையும் நிறுத்திவிட்டதாக அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்புக்கு கிராக்கி இருந்ததால், தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமாக பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆண்டுதோறும் பல ஆயிரக் கணக்கில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் பொறியியல் படிப்பு படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானது. அதே அளவுக்கு மாநிலத்திலும், தேசிய அளவிலும் வேலைவாய்ப்பு பெருகவில்லை. தொழில் நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் இல்லை. இதுவே வேலை இல்லாதோர் எண்ணிக்கை உயர காரணமானது. இதனால் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்வதும் படிப்படியாக குறைந்தது.
இந்த நிலவரம் எதை காட்டுகிறது?
தமிழகத்தில் பள்ளிக் கல்வி முடித்தவர்களும் பட்டப்படிப்பு முடித்தவர்களும் வேலையில்லாமல் எந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதை இந்த நிலவரத்தை வைத்து எளிதாக புரிந்து கொள்ளலாம். ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்தால் போதும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர்.
* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) வரி தண்டலர் (கிலேடு 1), வரைவாளர் மற்றும் நில அளவர் என மொத்தம் 6,491 பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கான கல்வி தகுதி 10ம் வகுப்புதான். ஆனால், இளம் நிலை, முதுநிலை பட்டதாரிகள் என சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
* தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மொத்தம் 4,600 உதவி பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. உதவி பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப்படிப்புடன் மாநில அரசின் செட் தேர்வு அல்லது தேசிய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்டி படித்து முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் பிஎச்டி முடித்தும் சுமார் 35,000 பேர் வரை உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U