👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகளை யூபிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்றது.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்ததாக முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். யூபிஎஸ்சிஆன்லைன் இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 1 முதல் 16-ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுக்கு விண்ணபிக்க முடியும்.
முதன்மைத் தேர்வு தொடங்குவதற்கு 3 அல்லது 4 வாரங்களுக்கு முன்பு, மாணவர்களுக்கான இ-நுழைவுச் சீட்டு, தேர்வு கால அட்டவணை ஆகியவை யூபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய அரசின் உயர் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக பதவியேற்பார்கள்.
தேர்வு நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகு, மாணவர்கள் பெற்ற மதிப்பெண், கட் ஆஃப் மதிப்பெண், விடைக் குறிப்பு உள்ளிட்டவை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 610 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். செப்டம்பர் 20ம் தேதி மெயின் தேர்வு தொடங்குகிறது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.)ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 19ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்தது. இந்தியா முழுவதும் 72 நகரங்களில் இந்த தேர்வு நடந்தது.தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் நடந்த தேர்வை 35,000 முதல் 40,000 பேர் எழுதினர். இந்நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் நேற்று முன்தினம் இரவு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைதளமான
upsconline.nic.inவெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 11,845 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 610 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 810 பேர் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வுக்கு ஆன்லைன்(
upsconline.nic.in) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 16ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U