இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பாக 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பாக 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பாக, மாணவர்களின் சந்தேகங்களை விளக்கும், 'தினமலர்'நாளிதழின், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, சென்னை, தி.நகரில் இன்று நடக்கிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்புவோர், தமிழக அரசின், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்து உள்ளனர். தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.தி.நகரில்பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் தொடர்பான நுணுக்கங்களை விளக்குவதற்காக, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'உங்களால்முடியும்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' கல்வி நிறுவனம், நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது.சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள, சர்.பிடி.தியாகராயர் அரங்கில், இன்று காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
உதவித்தொகைநிகழ்ச்சியில், கல்விக் கடன் பெறுவது குறித்து, வங்கி அதிகாரி, ஜி.விருதாச்சலம் விளக்கம் அளிக்க உள்ளார்.எந்த கல்லுாரியில், என்ன படிப்பை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பாக, கல்வி ஆலோசகர், ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம் அளிக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்கும், 1,000 மாணவர்களுக்கு இலவச, 'ரோபாடிக்ஸ் ஒர்க் ஷாப்'பில் பங்கேற்க வாய்ப்புவழங்கப்பட உள்ளது.மேலும், 50 மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் பாடப்பிரிவுக்கான உதவித்தொகை வழங்கப்படுவதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், கவுன்சிலிங் கையேடு, இலவசமாக வழங்கப்படும்.நிகழ்ச்சியை, 'பெரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி' ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews