நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வு மறுப்பு: காமராஜர் இல்லம் முன்பு போராட்டம்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வு மறுப்பு: காமராஜர் இல்லம் முன்பு போராட்டம்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு பட்டியலில் பெயர் இல்லாததால் விருதுநகரில் காமராஜர் இல்லம் முன்பு மாற்றுத்திறனாளி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (27). மாற்றுத்திறனாளி. வலது கையில் மூன்று விரல்கள் இல்லை. கடந்த 2011ல் பிளஸ் 2 முடித்த இவர், 2011-2013 மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீஷியன் முடித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 140 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். ஆனால் கலந்தாய்வு பட்டியலில் இவரது பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் அருண்குமார் மனுத்தாக்கல் செய்தார்.
மருத்துவக் குழு அமைத்து அருண்குமாரின் உடல்தகுதியை பரிசோதிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மருத்துவ குழு பரிசோதனை செய்து, மருத்துவ படிப்பிற்கு அருண்குமார் தகுதியானவர் என சான்றிதழ் வழங்கியது. ஆனால் நேற்று வெளியிடப்பட்ட கலந்தாய்வு பட்டியலில் அருண்குமார் பெயர் இடம் பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்த அருண்குமார் விருதுநகரிலுள்ள காமராஜர் இல்லத்திற்கு இன்று காலை வந்தார். அனைத்து சான்றிதழ், மருத்துவ உபகரணங்களுடன் வந்த அவர் இல்லம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பஜார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் அருண்குமாரின் போராட்டம் மதியம் 12 மணி வரை நீடித்தது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews