👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2017-18ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்.
மேலும், பள்ளிகல்வித்துறை மூலம் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு கொண்டு பஸ்சில் மாணவர்கள் பயணம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில் பள்ளிகல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காஞ்சிபுரம் எழிலரசன் (திமுக) பேசியதாவது:
அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் அதற்குரிய தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். ஏற்கனவே, இருக்ககூடிய பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புகின்றனர்.
அமைச்சர் செங்கோட்டையன்:
நடுநிலை பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தான் எல்கேஜி, யுகேஜி நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அங்கன்வாடி மையத்தில் ஆங்கில வழி மட்டுமின்றி தமிழ் கற்றுத்தரப்படுகிறது. இந்த மையங்களில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளோம்.
எம்எல்ஏ எழிலரசன் (திமுக) :
பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.
அமைச்சர் செங்கோட்டையன்:
12 ஆண்டுகாலம் ஒரே பாடத்திட்டங்கள் இருந்தது. இப்போது அந்த பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இதனால், தான் புத்தகங்களை உடனடியாக வழங்க முடியவில்லை என்ற குறைபாடு உள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். பாடப்புத்தங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும்.
எம்எல்ஏ எழிலரசன் (திமுக):
விலையில்லா மடிக்கணினிக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த மாணவர்களிடம் அரசு விளக்கம் தராமல் தடியடி தந்துள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன்:
இந்தாண்டு மாணவர்களுக்கு முதலில் மடிக்கணினி வழங்கிய பிறகு சென்ற ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
எம்எல்ஏ தங்கம் தென்னரசு:
படித்து முடித்த மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் போதே மடிக்கணினி கொடுத்திருக்க வேண்டும். அரசு ஏன் காலதாமதம் செய்தது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:
மடிக்கணினி டெண்டர் வழக்கு முடிந்த நிலையில் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன் :
2017-18ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்
எம்எல்ஏ எழிலரசன் (திமுக) :
பேருந்து பயண அட்டை சென்ற ஆண்டு செப்டம்பர் வரை வழங்க முடியவில்லை.
இந்தாண்டு பயண அட்டை வழங்கப்படவில்லை.அமைச்சர் செங்கோட்டையன்: பழைய பயண அட்டை காட்டி செப்டம்பர் வரை பயணம் செய்யலாம்.
சீருடை அணிந்து வருபவர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சர் தெளிவுப்படுத்துள்ளார்.
அதே வேளையில் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு கொண்டு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U