கோவை CEO-வின் பள்ளி நேர நீட்டிப்பு உத்தரவுக்கு எதிர்ப்பு: மாணவர்களின் பாதுகாப்பு கருதி உத்தரவை திரும்பப்பெற பெற்றோர்கள் வலியுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

கோவை CEO-வின் பள்ளி நேர நீட்டிப்பு உத்தரவுக்கு எதிர்ப்பு: மாணவர்களின் பாதுகாப்பு கருதி உத்தரவை திரும்பப்பெற பெற்றோர்கள் வலியுறுத்தல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குழந்தைகள் பாதுகாப்பு கருதி பள்ளி நேர நீட்டிப்பு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கோவை CEO க்கு பெற்றோர்கள் வேண்டுகோள் கோவை கல்வி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் புதிய உத்தரவுக்கு எதிர்ப்பு - பாதுகாப்பு இன்மை தொடர்பாக பெற்றோர் தரப்பில் வைக்கும் வினாக்கள். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடந்த வார இறுதியில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி வேலை நேர நீட்டிப்பு பற்றிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். Click Here To Read Coimbatore CEO NEW Proceedings (((( ந.க.எண்: 5831/ ஈ2 / 2019 (04/07/2019 )))) அதன் அடிப்படையில் 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் காலையும் மாலையும் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், அதற்கு காலை 8.15 மணி முதல் 5.30 மணிவரை பள்ளி வளாகத்தில் மட்டுமே இருக்க வேண்டும். சிறப்பு வகுப்புகளுக்கான செயல்முறைத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.  இந்த நேர நீட்டிப்பு சம்மந்தமான கடந்த வியாழன் அன்று கோவையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறப்பட்டுள்ளது.  ஆனால் வெள்ளிக்கிழமை மாலையில் குழந்தைகளின் பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்களின் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில்  வசிக்கும் மாணாக்க பெற்றோர் தரப்பில் ஒருசில வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. அவையாவன: 1) 6 முதல் 9 வகுப்பு மாணாக்கர்களின்  கல்விசார் உளவியல் கூறும் வகுப்பறை கால கற்றல் அளவு என்ன? 2) கல்விசார் கற்றல் நிகழ்வுகள் வகுப்பறைகளில் மட்டுமே உண்டெனில் சமுதாய வழிக்கற்றல் உளவியல் முற்றிலும் புறக்கணிப்பு நன்மை தருமா? 3) மாணவ மாணவிகளின் காலை மாலை நேர குடும்ப உறவு முறை , சமுதாய நட்புறவு இணக்க முறை இந்த கால நீட்டிப்பால் வலு பெறுமா? இழக்குமா? 4) நேர நீட்டிப்பு சம்மந்தமாக மாணாக்கர்களுக்கான (அரசு பள்ளிகளின்) கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் நிலைப்படுத்தப்பட்டு உள்ளனவா?
5) 6 முதல் 8 வகுப்பு மாணாக்கர்கள் உடலளவிலும், மன அளவிலும் காலை, மாலை நேர விளையாட்டு மனப்பான்மையை ( இந்த கால நீட்டிப்பு ) மாற்றுவதால் இயந்திர மயமான இந்த வேளையில் அவர்களின் உடல் மனநிலை சீரடையுமா? 6) அரசு பேருந்துகளில் பள்ளிகளுக்கு வரும் கிராமப்புற மாணவர்களுக்கு இந்த நேர நீட்டிப்பு சம்மந்தமான சிக்கல் உள்ளன. குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படும் கிராமங்களில் கால நேரம் மாற்றம் செய்யப்படுமா? அல்லது பேருந்து நேர மாற்றம் சாத்தியமா? 7) பேருந்துகள் இல்லாத பல்வேறு கிராமங்கள் இன்னும் கோவை மாவட்டத்தில்  உள்ளன. நடந்து பள்ளிக்கும் வீட்டிற்கும் செல்லும், குறிப்பாக 6 முதல் 9 வகுப்புகள் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள்? 8) வருடத்தில் பாதி மாதங்கள் மாலை 5.30 மணிக்குள் இருள் சூழும் சூழலில் பெண் குழந்தைகளை பாதுகாப்பு இன்மை காரணமாக பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் நிலை ஏற்படும் என்பதை மறுக்க இயலுமா? 9) வால்பாறை, தடாகம், மதுக்கரை தோலம்பாளையம், ஆணைகட்டி உள்ளிட்ட மலை வாழ்  பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு நிலைதான் என்ன?
10) காலை மாலை (நேர நீட்டிப்பு) கற்றல் திட்டங்கள் மற்றும் தினசரி தேர்வுகள் மாணாக்கர்களை சோர்வு அடைய வைப்பதுடன், அதீத நேரம் பள்ளியில் செலவிடுவதால் மாணவர்களுக்கு உளவியல் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி மீதான வெறுப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லையா? 11) கோவை மாவட்ட கல்வித் துறை சார்ந்த 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவிகிதம் கடந்த பல ஆண்டுகளாக தமிழக அளவில் நல்ல, மேம்பட்ட நிலையில் உள்ள சூழலில் இது போன்ற பரீட்சயங்கள் அவசியம் தானா? 12) மாணாக்கர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சிக்கல்கள் உள்ள இந்த அறிவிப்பு சம்மந்தமாக தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? 13) பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் முதன்மை ஆசிரியர் சங்கங்களிடமிருந்து இந்த காலநீட்டிப்பு தொடர்பான சாதக பாதக கருத்துகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டனவா?
- இது போன்ற பல்வேறு கருத்துகள் மற்றும் வினாக்கள் மாணவ மாணவியர்களின் பெற்றோர் தரப்பிலிருந்து வினவப்பட்டன. மேலும் காலை மாலை நேர உணவு தயார் செய்தல் மற்றும் நேரத்திற்கு எடுத்துக்கொள்ளுதல்  தொடர்பான திட்டமிடல் சிக்கல்கள் அதிகமாக உள்ளன. 10,11,12 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அவர்களின் வயதிற்கு உண்டான புரிதல் பெற்று உள்ளதால் அரசு பொதுத் தேர்வுகளை முன்னிலைப்படுத்தி சிறப்பு வகுப்புகள் வழக்கம் போல நடத்தப்பட வேண்டும். அதே சமயத்தில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அறிவிக்கப்பட்ட 6,7,8,9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான (பாதுகாப்பற்ற) பள்ளி நேர நீட்டிப்பு தொடர்பான செயல்முறைகளை (((( ந.க.எண்: 5831/ ஈ2 / 2019 (04/07/2019 )))) திரும்ப பெறப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றனர். மறுக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews