👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

கல்வி கட்டணம் செலுத்தாததால் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகம், பாடப்புத்தகங்களை வழங்க மறுத்து வருகிறது என்ற தமிழக முதல்வருக்கு மாணவிகள் புகார் கடிதம் அனுப்பினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் முக்மமது இலியாஸ். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மேலகாவிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சுகைனா (10) 5ம் வகுப்பும், ஆஸ்னா (7) 2ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் மேலக்காவிரி தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகார் மனு அனுப்பினர். அதில் மேலக்காவிரி தனியார் பள்ளியில் படிக்கும் எங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு அதிகம் கட்டணம் வசூலிக்கின்றனர். கடந்தாண்டு மட்டும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் என இருவருக்கும் ரூ.30,000 பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளோம்.
இந்ததாண்டு கல்வி கட்டணத்தை செலுத்துகிறோம் என பெற்றோர் கூறியும் இதுவரை பள்ளி நிர்வாகம், பாடப்புத்தகங்கள் கொடுக்க மறுத்து வருகிறது. கல்வி கட்டணம் செலுத்தினால் தான் பாடப்புத்தகங்களை தருவோம் என்கின்றனர். இதனால் எங்களுக்கு கல்வி பாதிப்பதுடன் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதுகுறித்து கும்பகோணம் ஆர்டிஓ மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளி திறந்த நாள் முதல் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் உள்ளோம். எனது தந்தை ஏழ்மையில் உள்ளதால எங்களால் புத்தகங்களை வாங்க முடியாத நிலை உள்ளது. பள்ளி நிர்வாகத்தால் எங்களின் கல்வி பாதிக்கிறது. இதுபோல் எங்கள் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கவில்லை. எனவே தமிழக முதல்வர் உடனடியாக எங்களின் கோரிக்கை ஏற்று நியாயம் வழங்கி எங்களுக்கும், எங்களை போன்றவர்களுக்கு கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U