* கல்வி மாவட்ட அளவில், 88 கல்வி மாவட்டங்களில் தலா ரூ.20 லட்சம் செலவில் ரூ.17 கோடியே 60 லட்சம் செலவில் மாதிரிப் பள்ளிகள் கட்டப்படும்.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது போல, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படும்.
* தமிழக சிறைச்சாலைகளில் உள்ள எழுதப்படிக்க தெரியாத 757 கைதிகளுக்கு, அடிப்படை எழுத்தறிவு அளிக்க சிறப்பு எழுத்தறிவு திட்டம் ரூ.14 லட்சத்து 60 ஆயிரம் செலவில் செயல்படுத்தப்படும்.
* விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் ரூ.6 கோடியே 23 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
* 223 மேனிலைப் பள்ளிகளில், தலா ரூ.20 லட்சம் செலவில் ரூ.44 கோடியே 60 லட்சம் செலவில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* அரசுப் பள்ளிகளி–்ல் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ரூ.16 கோடியே 83 லட்சம் செலவிடப்படும்.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த நல்வாழ்வுத் திட்டம் ரூ.12 கோடியே 31 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
* அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 50, அரசு மேனிலைப் பள்ளிகள் 50 என மொத்தம் 100 பள்ளிகள், 44 மாணவியர் விடுதிகளுக்கு சூரிய ஒளிமின் வசதி ரூ.4 கோடியே 51 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
* பெரம்பலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ.2 கோடியே 84 லட்சம் ெசலவில் 2 உண்டு உறைவிடப்பள்ளிகள் தொடங்கப்படும்.
* புதிய பாடப்புத்தகம், தகவல் தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி அளிக்கவும், ரூ.20 லட்சம் செலவில் சிறப்பு புலன்கள் அமைக்கப்படும்.
* சென்னை, திருப்பூரில் ரூ.80 லட்சம் செலவில் புதிய நூலக கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.
* சேலம் மாவட்ட மைய நூலகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான சிறப்பு நூலகம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும். அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் செவி மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உடையோருக்கு ரூ.48 லட்சம் செலவில் சிறப்பு பிரிவு தொடங்கப்படும்.
* பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களுக்கு, தலா ரூ.50 ஆயிரம் வீதம் 120 கல்வி மாவட்டங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
* தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இவ்வாறு அறிவுப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.