👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

அரசு பள்ளிகளில் இலவசங்களை வாரி வழங்கியும் தமிழகம் முழுவதும் முதல் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில் மொத்தம் 1513 பள்ளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் மதிய உணவு, இலவச பஸ் பாஸ் என்று 14 வகையான இலவச திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ-மாணவியர் பொதுத் தேர்வுகளில் அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. மாணவ மாணவியர் நலன்களுக்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் மூலம் பள்ளிகளில், குறிப்பாக கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. பள்ளி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்) உள்ள தகவல்கள்படி நடப்பு 2019-2020 கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 1513 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் 72 பள்ளிகளும், மாநகராட்சி பள்ளிகளில் 4, மாற்றுத்திறன்கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகள் 16ம், முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 275ம், கள்ளர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் பள்ளிகள் 18, நகராட்சி பள்ளிகள் 27, பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 7, பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகள் 1068, பழங்குடியினர் நல பள்ளிகள் 26 என்று மொத்தம் 1513 பள்ளிகள் முதல் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கை நடைபெறாத பள்ளிகளாக உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது ெதாடர்பாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மீதான மோகம்தான் அரசு பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறாததிற்கு காரணமாகும். சிறு வயது குழந்தைகளை சற்று தூரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர் தினசரி அழைத்து சென்று திரும்ப கொண்டுவிடுவதில் பெற்றோர் சிரமம் அடைகின்றனர். தனியாக அனுப்பவும் பயப்படுகின்றனர். அதே வேளையில் தனியார் பள்ளிகள் மூலை முடுக்குகளிலும் காலை, மாலை வேளையில் வேன் உள்ளிட்ட வாகன சேவை ஏழை பெற்றோரையும் கவருகிறது. குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்வதையும் உணருகின்றனர். மேலும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவ மாணவியர் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ெதாடக்க நிலை வகுப்புகளில் சேர்க்கை நடத்தப்படுவதும் மற்றொரு காரணம் ஆகும். ஒரு கி.மீ சுற்றளவில் வேறு அரசு பள்ளிகள் இல்லையென்றால் மட்டுமே தனியார் பள்ளிகள் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் ஏழை பெற்றோர், குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு பதிலாக தனியார் பள்ளிகளுக்கு கொண்டு செல்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அருகே வசிக்கின்ற பெற்றோர் நடந்தே குழந்ைதகளை கொண்டு சென்றுவிடுகின்றனர்.
எந்த கட்டணமும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். சிலர் வேன் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்று எண்ணுகின்றனர். விதவை, மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்டவர் என்று ஒதுக்கீடு 25% பிரிவின் கீழ் வருகின்ற பெற்றோரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துவிடுகின்றனர். இதுவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய காரணம் ஆகும். சில பகுதிகளில் பள்ளி வயது குழந்தைகள் இல்லாத நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருக்கலாம். அதே வேளையில் இந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகம் நடைபெற்றுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் தொடக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U