தேசிய கல்விக் கொள்கை வரைவு 22 மொழிகளில் வெளியிட வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

தேசிய கல்விக் கொள்கை வரைவு 22 மொழிகளில் வெளியிட வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வரைவு தேசிய கல்விக் கொள்கையை தமிழ் உட்பட 22 மொழிகளில் வெளியிட கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் பகவத்சிங் தாக்கல் செய்த பொதுநல மனு: வரைவு தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு மே 30 வெளியிட்டது. இதுகுறித்து ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி அசாமி, பெங்காளி, குஜராத்தி, ஹிந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டவை. ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் வரைவு தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற மொழி பேசும் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் கொள்கையை வெளியிட்டால்தான், அனைவரும் விரிவாக கருத்துகளை முன்வைக்க முடியும். சரியான முடிவெடுக்க இயலும்.தேசிய கல்விக் கொள்கையின்படி கல்வியின் தரத்தை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும். கருத்துக்கேட்பில் வெளிப்படைத் தன்மை அவசியம். கல்விக் கொள்கை என்பது எதிர்கால சந்ததியினர் சம்பந்தப்பட்டது. தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும். அதன்படி கருத்துக் கேட்பு நடத்தி முடிவெடுக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வரைவு கொள்கையை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு பகவத்சிங் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 30க்கு ஒத்திவைத்தது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews