👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த மாதம் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்த சூழலில், அதை தமிழாக்கம் செய்து, தமிழ், ஆங்கில வடிவில்
www.tnscert.org என்ற இணையதளத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த வரைவு தேசியக் கல்விக் கொள்கை மீதான கருத்தரங்குகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மண்டல வாரியான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் புதிய தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை மீது வரும் 25ம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இ-மெயில் மூலம் கருத்து தெரிவிக்க விரும்புவோர்
scert.nep2019@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும், தபால் மூலம் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6 என்னும் முகவரிக்கு தங்களது கருத்துக்களைஅனுப்பலாம்.கருத்து தெரிவிப்போர் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தெளிவாகவும், சுருக்கமாகவும் எழுதி அத்துடன் எத்தனை பக்கங்கள், எத்தனை பத்திகள் என்பதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை தமிழ் பிரதியில் குறிப்பிட்டுள்ள கருத்து தொடர்பாக தெளிவு பெற விரும்புவோர் ஆங்கில பிரதியை பார்த்து தெளிவு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U