மீன்வள பல்கலையில் 14ல் கலந்தாய்வு துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

மீன்வள பல்கலையில் 14ல் கலந்தாய்வு துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாகப்பட்டினம், ஜெயலலிதா மீன்வள பல்கலையில், மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு, வரும், 14ம் தேதி முதல், 16ம் தேதி வரை நடக்க உள்ளது. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு, 14ம் தேதியும், இளநிலை மீன்வளப் பொறியியல், இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல் பட்டப் படிப்புகளுக்கு, 15ம் தேதியும், கலந்தாய்வு நடக்க உள்ளது.இளநிலை உயிர் தொழில்நுட்பவியல், உணவு தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல் பட்டப் படிப்புகளுக்கு, 16ம் தேதி, நாகை, வாணியஞ்சாவடியில் உள்ள, மீன்வள முதுநிலை பட்டப்படிப்பு நிலையத்தில், கலந்தாய்வு நடக்க உள்ளது.கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் விபரம், www.tnjfu.ac.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள, 'கட் ஆப்' மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள், கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.'கலந்தாய்விற்கான அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'தபால் அனுப்பப்படாது' என, பல்கலை துணைவேந்தர், பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews