மருத்துவக் கல்லுாரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு: அனைத்துக்கட்சி கூட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

மருத்துவக் கல்லுாரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு: அனைத்துக்கட்சி கூட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவக் கல்லுாரிகளில், முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டம், நாளை மாலை, சென்னை, தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது .தமிழகத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு, முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்துள்ளது.இதை, தமிழக அரசு ஏற்கவில்லை. தற்போது, முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, மருத்துவக் கல்லுாரிகளில், தமிழக அரசு செயல்படுத்தினால், மருத்துவப் படிப்பில், 25 சதவீத இடங்களை, கூடுதலாக ஒதுக்குவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதன்படி, கூடுதலாக, 1,000 இடங்கள் வருகிறது என்றால், அதில், 150 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போய் விடும். மீதமுள்ள, 850ல், 264 இடங்கள் பொதுப்போட்டிக்கு போய் விடும். மீதி, 586 இடங்களை, 69 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பிக் கொள்ளலாம்.'இதை ஏற்கக்கூடாது' என, சட்டசபையில், தி.மு.க., சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது.
தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது, 'அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, இதுகுறித்து முடிவு செய்யப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.அதன்படி, நாளை மாலை, 5:30 மணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம், முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான இடங்களில், முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதா, வேண்டாமா என்று, முடிவு எடுக்கப்பட உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews