தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த 1.28 கோடி ஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2019

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த 1.28 கோடி ஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சட்டப்பேரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மானிய கோரிக்கையில் பதிலளித்து பேசிய பிறகு, தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர்கபில் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
* அம்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி இணையத்தில் அடிப்படை கட்டமைப்புகள் ரூ.1.61 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
* காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.4.18 கோடி செலவில் ஒருங்கிணைந்த தொழிலாளர்துறை வளாகம் கட்டப்படும்.
* சென்னை வேலைவாய்ப்பு அலுவலம் சென்னை மண்டல இணை இயக்குனர் அலுவலகம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான சேவை மையத்தை இணைத்து ரூ.3.30கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்படும்.
* தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திட ரூ.1.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழக்கும் திட்டத்தின் கீழ் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும். இதற்காக ரூ.2.33 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.
* அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிபெறும் ஆட்டோமொபைல் பயிற்சியாளர்களுக்கு மின்சார வாகன பராமரிப்பு
பயிற்சி வழங்குவதற்காக ரூ.4.77 கோடி ரூபாய் செலவில் மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்து வாங்கப்படும்.
* கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1.68 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
* 16 இடங்களில் புதிதாக ரூ.14.30 கோடி செலவில் இஎஸ்ஐ மருந்தகங்கள் தொடங்கப்படும்.
* 25 இஎஸ்ஐ மருந்தகங்களில் ரூ.57 லட்சம் செலவில் ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப்படும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews