School Morning Prayer Activities - 14.06.2019 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 13, 2019

School Morning Prayer Activities - 14.06.2019


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருக்குறள்


அதிகாரம்:ஒப்புரவறிதல்

திருக்குறள்:217

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

விளக்கம்:

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

பழமொழி

Discretion is better than valour

விவேகம் வீரத்தினும் சிறப்பு

இரண்டொழுக்க பண்புகள்

1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி

நம்பிக்கை எனும் மையப்புள்ளியில் இருந்துதான் ஆர்வம் எனும் அற்புதம் உற்பத்தியாகின்றது.
>
-------- சாரதா தேவி

 பொது அறிவு

ஜூன்-14- உலக இரத்த தானம் அளிப்பவர் தினம்
1.முதன்முதலாக இலவசமாக ரத்த தானத்தை தொடங்கி வைத்த நாடு எது?
இங்கிலாந்து

2. ஒரு துளி ரத்தத்தின் எடை எவ்வளவு?
0.05 மில்லிகிராம்

English words& meanings

1. Elf - an angel like creature in fairy tales, நீதிக் கதைகளில் வரும் தேவதை

2. Enquire - asking for information, விசாரிப்பு

ஆரோக்ய வாழ்வு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

Some important  abbreviations for students

SIM - Subscriber Identity Module

நீதிக்கதை

தெனாலி ராமன் கதைகள் – வைத்திய செலவு
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் “பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார்.

தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.

தெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

“சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.

போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து “உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்” என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான்.

அதற்கு தெனாலிராமன் “ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே………… இது என்ன நியாயம்” என்றான்.

சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.

வெள்ளி

சமூக அறிவியல் & விளையாட்டு

நேபாளத்தில் எவரெஸ்ட்  சிகரம் சாகர் மாதா (SAGARMATHA) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  சாகர் மாதா என்பதற்கு
 வானத்தின் தேவதை என்று அர்த்தம்.

பாரம்பரிய விளையாட்டு

பல்லாங்குழி விளையாடும் முறையை பொள்ளாச்சி அரசுப் பள்ளி மாணவி விளக்கும் காணொலி மேல் உள்ள லிங்க்கில்

இன்றைய செய்திகள்

14.06.2019

*செப்டம்பர் 6- ல் சந்திரயான் -2 நிலவில் இறங்கி பணிகளை தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானி  மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

* சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கியுள்ளது.

* உலகிலேயே மிக நீண்ட கடல்பாதையை கொண்ட கனடா மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

* உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது.

* மாநில பால் பேட்மிண்டன் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது.

Today's Headlines

Coming soon

👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews