👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

பெங்களூரூ: 22 வயது சென்னைவாசியான கே பி ஷியாம், அடுத்த சில மாதங்கள் Google ஐடி கார்ட் போட்டுக் கொண்டு வேலைக்கு போகப் போகிறார். மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம். ஆண்டு சம்பள பேக்கேஜ் 60 லட்சம் ரூபாயாம்.
இவர் பெங்களூரில் உள்ள International Institute of Information Technology கல்லூரியில் ஐந்து வருடத்துக்கு I-Mtech என்கிற இரட்டைப் பட்டப் படிப்பைப் படித்திருக்கிறாராம்.
வரும் அக்டோபர் 2019-ல் போலாந்தில் உள்ள, வார்சா (Warsaw) Google அலுவலகத்தில் வேலைக்கு சேரப் போகிறாராம். கடந்த ஜனவரி 2019-லேயே இந்த கூகுள் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார் ஷியாம்.
Google நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த பிறகு ஒரு ஆன்லைன் நேர்காணல் நடத்தி இருக்கிறார்கள். அதில் தேறியவர்களை, ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் ஒரு நேர்காணல் நடத்தி இருக்கிறார்கள். அதில் எல்லாம் தேறிய பிறகு தான் இப்போது கூகுள், ஷியாமை வேலைக்கு அழைத்திருக்கிறது.
இவர் Google நிறுவனத்தின் க்ளவுட் ப்ளாட்பார்மில் வேலை பார்க்கப் போகிறாராம். இவர் தந்தை கே என் பாபு ஒரு மத்திய அரசு ஊழியர். தாய் ஜெயஸ்ரீ தமிழ் நாடு அரசு ஊழியர். இவரின் சகோதரர் கே பி சித்தார்த், அமெரிக்காவில் எரிபொருள் செல் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாராம். விரைவில் முனைவர் பட்டமும் இந்தத் துறையில் பெறப் போகிறாராம்.
ஷியாம் 12-ம் வகுப்பில் 95.2 சதவிகித மதிப்பெண் எடுத்திருக்கிறார். அதோடு ACM-ICPC என்கிற சர்வதேச ப்ரொகிராமிங் போட்டியில் இரண்டு முறை உலக அளவிலான இறுதிப் போட்டி வரை முன்னேறி இருக்கிறார். இந்த போட்டி ப்ரொகிராமிங் உலகின் ஒலிம்பிக்ஸ் என்பார்களாம். அந்த அளவுக்கு கடுமையான போட்டியிலேயே இரண்டு முறை உலக அளவில் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறார் என்றால் Google வேலை கொடுக்காதா என்ன..?
அது மட்டுமின்றி, ஷியாம் கடந்த 2018-ல் ஃபேஸ்புக் நிறுவனத்தில் தான் பயிற்சி (Internship) எடுத்திருக்கிறார். பயிற்சி எடுத்த இடம் லண்டன். "மாணவர்கள் கணிணி அறிவியல் பற்றிய அடிப்படைகளில் நல்ல அறிவும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நல்ல திறனும் வளர்த்துக் கொண்டால் Google நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்" என ஒரு இலவச டிப்ஸும் கொடுக்கிறார் ஷியாம். அடுத்த Google சிஇஓ-வாக வர வாழ்த்துகள் ஷியாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U