👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, அதேநேரத்தில், வெளிமாநிலங்களில் படித்தவர்கள், மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் போது, பெற்றோரின் பிறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும், என, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜன் கூறினார்.
இணையதளம்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி களில், 3,250 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 15 சதவீதமான, 488 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள, 2,752 இடங்கள், மாநில ஒதுக்கீட்டில் உள்ளன. அதுபோல, பி.டி.எஸ்., படிப்புக்கு உள்ள, 100 இடங்களில், 15 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்க போக, மீதமுள்ள, 85 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன. இந்த இடங்களில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கி உள்ளன. இதற்கு,
www.tnhealth.org,
www.tnmedicalselection.org என்ற இணைய தளத்தில், விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
ஆதார் கார்டு
வரும், 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோரின், பிறப்புச் சான்றிதழை இணைக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, வெளிமாநிலங்களில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்தவர்கள், பெற்றோரின் பிறப்பு சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும். இல்லையேல், ஒதுக்கீடு பட்டியலில் வர முடியாது.அதே நேரம், தமிழகத்தில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்தவர்கள், பெற்றோரின் ஆதார் கார்டு உட்பட, ஏதேனும் ஒரு சான்றிதழை அளித்தால் போதும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U