👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 229 புலிகள் உள்ளதாகவும், குறிப்பாக சத்தியமங்கலம் முதுமலை வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.
பசுமை பரப்பளவு 33.3 சதவீதம் என்ற இலக்கை அடைய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 2018 - 2019ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் ரூ. 28 கோடி இலாபம் அடைந்துள்ளதாகவும், தற்போது வரை ரூ.100 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகவும் கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், திருச்சியில் விரைவில் வன உயிரியல் பூங்கா திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் வெளிப்படையாகவே நிரப்பப்படும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U