👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கா.ரவி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டு ஆகஸ்ட் (2019) முதல் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன.
இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான தேதி முடிவற்ற நிலையில், தற்போது வருகிற ஜூன் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 14 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் மற்றும் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
கலந்தாய்வுக்கு வரும்போது விண்ணப்பித்த விண்ணப்பம், சலான் மற்றும் அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் சேர்க்கையானது கலந்தாய்வு மூலம் ஒரே நாளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும். இதைத் தவிர, விலையில்லா பாடப் புத்தகம், வரைபட கருவிகள், மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் தருமபுரி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விவரங்களுக்கு, முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், தருமபுரி. தொலைபேசி எண் 04348-235323 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U